கணவரிடம் நெருங்க கூடாது, எச்சில் தட்டில் சாப்பிடணுமாம், அந்த டப்பாவுல.. கலங்கடித்த கன்னியாகுமரி பெண்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புதுமணப்பெண் பட்ட துயரமானது, ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், இளம்பெண் ஏற்படுத்திவிட்டு போன தாக்கமானது, இன்னும் குறையவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்... இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஸ்ருதி.. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுருதி.

kanniyakumari audo mother in laws cruelty

இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது.. இந்நிலையில், சுசீந்திரத்தில் கணவருடன் வசித்துவந்த ஸ்ருதி, நேற்றுமுன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, ஸ்ருதி மரணத்துக்கு காரணம் என்ன என்ற விசாரணையில் இறங்கினார்கள்.

புதுமணப்பெண்: அந்தவகையில், கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி, ஸ்ருதியின் உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போதுதான் தற்கொலைக்கு முன்பு, வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை ஸ்ருதி வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆடியோவை, தன்னுடைய அம்மாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார் ஸ்ருதி.

அதில், "அம்மா, என்னை என்னுடைய மாமியார், அம்மா வீட்டில் விட்டுவிட வேண்டும் என அடிக்கடி சொல்றாங்க.. அப்படி வாழாவெட்டியாக உங்கள் வீட்டில் வந்து உட்கார எனக்கு விருப்பமில்லை.. அதைவிட இங்கு இருப்பது எவ்வளவோ மேல்.. அவருக்கும் (கணவர்) எனக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை.. எல்லா பிரச்சனையும் இவங்களால்தான் (மாமியார்) வருது.

மாமியார் டார்ச்சர்: கணவருடன் நான் வெளியே செல்லக்கூடாதுன்னு சொல்றாங்க.. கணவர் சாப்பிட்டப்புறம்தான் நான் சாப்பிடணுமாம். என் கணவர் பக்கத்தில் நான் உட்கார கூடாது.. அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது.. எச்சில்தட்டு எடுத்து சாப்பிடணும்.. இப்படியெல்லாம் என்னை கொடுமைப்படுத்தறாங்க.

என்னுடைய நகையெல்லாம் 2 டப்பாவில் போட்டு வெச்சிருக்கேன்.. அந்த டப்பாவை எனது கணவரிடம் கேளுங்கள். அவர் எடுத்து உங்களுக்கு தந்திடுவார். அதை தயவு செய்து வாங்கிக்குங்க.. தமிழ்நாட்டு கலாசாரப்படி என்னடைய இறுதி சடங்கை நிறைவேற்றுவதாக சொல்லி யாராவது வந்தால், அது தேவையே இல்லை.. அப்படி பண்ண விடாதீங்க... இவங்க கலாச்சாரத்தில் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்.

மின் தகன மேடை: என் உடலை கோயம்புத்தூருக்கு கொண்டு போயிருங்க.. இல்லைன்னா இங்கேயே இறுதி சடங்கு பண்ணுங்க... மின்தகன மேடையில் வைத்து சுவிட்ச் ஆன் செய்துவிட்டால் போதும்... இவர்கள் கட்டுப்பாட்டுப்படி ஒன்றும் செய்துவிட வேண்டாம்.

நான் (ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு) அவள் கல்யாணத்துக்கு ஏதாவது பண்ணனும்ன்னு இருந்தேன். நான் இல்லாவிட்டாலும், என்னுடைய ஏதாவது நகையை அவளுக்கு கொடுத்திடுங்க.. என்னை மன்னித்திடுங்க அம்மா. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருக்க விருப்பமில்லை.. அதனால் மட்டும்தான் நான் இப்போ போகிறேன்... திரும்பவும் அவங்க என்னை வீட்டில் கொண்டு விட சொல்கிறாங்க. திரும்ப வரவேண்டாம்ன்னு சொல்கிறாங்க. அப்படி நான் அங்கு வர மாட்டேம்மா" என்று ஆடியோவில் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் புதுமணப்பெண்.

ஆடியோ பரவல்: மாமியாரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட இந்த இளம்பெண்ணின் ஆடியோதான், இப்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.. இந்த பெண் ஆடியோவில் பேசியிருப்பதை கேட்டு, ஒட்டுமொத்த மக்களும் அப்படியே இடிந்துபோயிருக்கிறார்கள்..!!!

மகளின் திருமணத்துக்கு 45 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக தந்ததாகவும், ஆனால், தங்கள் மகள் 3 மாதம் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் ஸ்ருதியின் உறவினர்கள் கதறி கூறுகிறார்கள்.. இந்த தற்கொலை மற்றும் ஆடியோ சம்பவத்தை அடுத்து ஸ்ருதியின் மாமியார் செண்பகவல்லிமீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+