தங்க மோதிரத்தை கழட்டி தந்த கன்னியாகுமரி பெண்.. யாரிந்த நாகர்கோவில் நபர்? அங்கதான் வினையே ஆரம்பிச்சது
கன்னியாகுமரி: தங்க மோதிரத்தை காதலன் கேட்டதுமே, உடனடியாக கழட்டி தந்துள்ளார் இளம்பெண்.. இந்த மோதிரத்தை திருப்பி கேட்க போய், இறுதியில் கதிகலங்கி போய்விட்டார் பரிதாப பெண்.. கன்னியாகுமரியில் அப்படி என்ன நடந்தது? யாரிந்த பெண்?
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ளது காரங்காடு புல்லுவிளை.. இந்த பகுதியை சேர்ந்த ஷாஜின் என்பவர், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தங்க மோதிரம்: இவரது குடும்பத்தினர் தற்போது பேயன்குழியில் வசித்து வரும்நிலையில், பக்கத்து ஊரை சேர்ந்த இளம்பெண்ணை ஷாஜின் காதலித்து வந்ததாக தெரிகிறது.. அந்த பெண்ணும் ஷாஜினை மனதார விரும்பியிருக்கிறார். இந்த பெண் தற்போது கல்லூரி படிக்கிறார்.. கடந்த 2022-ம் பிளஸ்-1 படிக்கும்போது, இவரிடம் ஷாஜின் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மாணவி தன்னிடம் பணம் இல்லாததால், கையில் கிடந்த தங்க மோதிரத்தை கழற்றி ஷாஜினுக்கு தந்துள்ளார்.. ஷாஜினும் அதை கொண்டுபோய் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.. பிறகு ஒருநாள் தன்னுடைய மோதிரம் பற்றி ஷாஜினிடம் மாணவி கேட்டுள்ளார். அதற்கு மாணவியிடம் ஷாஜின், "உன் மோதிரம் என் வீட்டில் இருக்கிறது, வீட்டுக்கு வா தருகிறேன்" என்று சொல்லி அழைத்து சென்றுள்ளார்..
மிரட்டல் வீடியோ: அப்போது, மாணவிக்கு ஜூஸில், மயக்க மருந்து கலந்து தந்து, பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியுடன் இருந்ததை ஷாஜின், செல்போனில் வீடியோ எடுத்து கொண்டாராம்.. இந்த வீடியோவை மாணவியிடம் காட்டி, தன்னுடைய செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. வீடியோவை பார்த்து பயந்துபோன மாணவியும், ஷாஜின் கேட்கும் நேரமெல்லாம், தன்னால் முடிந்த அளவு பணம் தந்து வந்துள்ளார்..
ஆனால் கடைசியாக, மாணவியிடம் ரூ.2 லட்சம் வேண்டும், இல்லாவிட்டால் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடப்போவதாகவும் மிரட்டியிருக்கிறார். அத்துடன் நில்லாமல், மாணவி ஆடை மாற்றும் போட்டோவையும் இணையத்தில் ஷாஜின் பகிர்ந்துள்ளார்.
அதிரடி கைது: இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி உள்ளார்.. உடனே பெற்றோர் குளச்சல் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஷாஜினை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications