கன்னியாகுமரியில் மாணவிகளிடம் மதமாற்ற சர்ச்சை - தையல் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை மதமாற்றம் செய்ய முற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி: இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசியும் மதம் மாறச் சொல்லியும் மாணவிகளை வற்புறுத்திய தையல் ஆசிரியை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்
இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ஆசிரியை மீது மாணவிகள் புகார்
இந்த நிலையில் நேற்றும் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் விசாரணை
இதைத் தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கோட்ட போது
மதமாற்ற சர்ச்சை வீடியோ சம்பந்தமாக தையல் ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியை மீது நடவடிக்கை
இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். கன்னியாகுமரியில் மாணவிகளை மதமாற்றம் செய்ய ஆசிரியை வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications