கன்னியாகுமரி லாட்ஜ்ஜில் யாரிது? நாகர்கோவில் குடோனில்.. பறந்து பறந்து அதிமுக பிரமுகரை தாக்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் இந்த சம்பவம், அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பான நாகர்கோவில் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் அந்த மூத்த நிர்வாகி.. நாகர்கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்... இவருக்கு 35 வயதுள்ள பெண் ஒருவர் நட்பானார்.

kanniyakumari lodge nagarcoil

இந்த பெண் கேரளாவை சேர்ந்தவர்.. இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமானது.. ஒருகட்டத்தில் அந்த பெண்ணை, அடிக்கடி கேரளாவில் இருந்து வரவழைத்து உல்லாசமாக இருக்க தொடங்கினாராம் அதிமுக நிர்வாகி..

நாகர்கோவில்: இவருக்கு சொந்தமான குடோன் ஒன்று நாகர்கோவிலில் உள்ளது.. இங்கு பந்தல் பொருட்களை போட்டு வைத்திருக்கிறாராம். இந்த குடோனைதான், தன்னுடைய "லாட்ஜ்" போல பயன்படுத்தி வருகிறாராம் நிர்வாகி..

இந்த குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து வந்து, சில நாட்கள் யாருக்கும் தெரியாமல் தங்க வைப்பாராம். பிறகு அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு, பணம் கொடுத்து, கேரளாவுக்கே அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்துள்ளது.

அதிமுக நிர்வாகி: அப்படித்தான், சமீபத்தில் அந்த நிர்வாகி, பெண்ணை அழைத்து வந்துள்ளார்.. வழக்கம் போல் தங்க வைத்து ஜாலியாக இருந்துள்ளார். ஆனால் இந்த முறை பணம் எதுவும் கொடுக்கவில்லையாம்.. இதனால், அந்த பெண்ணுக்கும், நிர்வாகிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. அதுமட்டுமல்ல, தன்னுடைய நண்பர்கள் சிலருடனும், உல்லாசமாக இருக்குமாறு அந்த பெண்ணை, அதிமுக நிர்வாகி கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

அந்த நண்பர்கள் அனைவருமே, அரசியல் கட்சியில் இருக்கிறார்களாம்.. ஆனால் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக மறுப்பு சொல்லி உள்ளார்.

இதனால் கோபமடைந்த அதிமுக நிர்வாகி, அந்த பெண்ணை தாக்கியிருக்கிறார். ஏற்கனவே தனக்கு பணம் தராத கோபத்தில் இருந்த பெண்ணும், "என்னையே அடிக்கிறீயா?" என கேட்டு, அந்த நிர்வாகியை பதிலுக்கு சரமாரியாக தாக்க துவங்கிவிட்டார்.

அவமானம்: அதிமுக நிர்வாகியை ஆவேசத்துடன் அடித்து துவம்சம் செய்ததுடன், அவரது சட்டை, லுங்கியை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கினார். அடி தாங்க முடியாமல் அந்த நிர்வாகி வீட்டுக்குள் ஓடிப்போனாராம்.. இதனை அங்கிருந்த சிலர், செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.. இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+