கோழிக்கடைக்காரர் என்ன செஞ்சாருன்னு பாருங்க.. உயிருடன் இருக்கும்போதே.. கிழிகிழியென உரித்து.. கொடுமை
கோழிக்கறியை துன்புறுத்தி வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி: கோழியை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு அருகே உள்ளது மேடவிளாகம் என்ற பகுதி..
இங்குள்ள கோழி கடையில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், கோழியை உயிருடன் துடிதுடிக்க அறுத்துள்ளார்..

கோழிக்கறி
வழக்கமாக கோழியை பிடித்து, மிஷினில் போட்டு கொன்று, அதற்கு பிறகு சுத்தம் செய்து, கத்தியால் வெட்டி தருவது வழக்கம்.. அதாவது, கோழியின் தலையை துண்டித்துவிட்டு, உயிர் போன பிறகு, அதற்கு பிறகுதான் தோல் உரிக்கப்பட்டு துண்டுகளாக வெட்டுவார்கள்.. ஆனால், இந்த நபர், செல்போனை பார்த்து சிரித்து கொண்டே கோழியை வெட்டுகிறார்..

கதறி அழும் கோழி
அதுவும் உயிருள்ள கோழியின் தோலை உரித்து, துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டுகிறார்... இந்த நபர் கோழியை வெட்டும்போது, அது கதறி அழுகிறது.. உடல் துள்ளி துள்ளி எழுகிறது.. ஆனால், எந்த மனவருத்தமும் இல்லாமல், மனசாட்சியும் இல்லாமல், குரூரமாக சிரித்துக்கொண்டே அந்த கோழியை வெட்டி உள்ளார்.. கோழிக்கறி வாங்க கடைக்கு போன நபர், இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து செல்போனில் எடுத்துள்ளார்..

ஜாலியாக வெட்டுவாராம்
இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் பதிவாகிவிட்டது.. வீடியோ பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ந்தனர்.. இந்த நபர் எப்போதுமே அப்படித்தானாம்.. கோழி வாங்க போனால், எல்லா கோழியையும் இவர் கொடூரமாகத்தான் ஜாலியாக வெட்டுவாராம். எனவே, இரக்கமற்ற செயலை செய்யும் நபரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் பொதுமக்கள் கருத்துக்களை பதிவிடஆரம்பித்தனர்..

மனு கைது
இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து தமிழக, கேரளா எல்லை பகுதியான செங்கவிளை பகுதியை சேர்ந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.. அவர் பெயர் மனு.. 36 வயதாகிறது.. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கொல்லங்கோடு போலீசார் கைது செய்து உள்ளனர்... மிகவும் குரூரமாக சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் கோழியை வெட்டிய நபரின் விடியோ இணையத்தில் பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications