கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹவுஸ் அரெஸ்ட்.. ரூமில் மனைவி.. பதறிய மதபோதகர்.. உக்கிரத்தில் உறவினர்கள்.. நள்ளிரவில் ஓடிவந்த போலீஸ்

புதுமனைவி ரூமுக்குள் சிறைவைக்கப்பட்டதை பார்த்ததுமே மதபோதகர் பதறியே போய்விட்டார்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: 62 வயதான மதபோதகர் ஒருவர், திடீரென திருமணம் செய்து கொண்டதால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அத்துடன் புதுமணப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர்கள் மதபோதகரிடம் நடந்து கொண்ட சம்பவம் குமரியில் பரபரப்பையும், பதற்றத்தையும் உண்டுபண்ணி வருகிறது.

குளச்சல் அருகே உள்ள பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் மதபோதகர்.. அவருக்கு 62 வயதாகிறது.. தன்னுடைய அம்மாவுடன் தனியாக இங்கு வசித்து வந்தார்... மதபோதகருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

அந்த பகுதிகளில், வீடு, வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்... கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, மதபோதகரின் அம்மா திடீரென இறந்து விட்டார்.

 மதபோதனை

மதபோதனை

தனக்கிருந்த ஒரே ஆதரவும் இல்லாத நிலையில், மனவேதனைக்கு ஆளானார் மதபோதகர்.. தனிமையில் இருந்த நேரத்தில், ஃபேஸ்புக்கில் கவனம் செலுத்தினார்.. அப்போதுதான், 45 வயதுடைய இந்தோனேசிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது... அவரும் மதநம்பிக்கை உள்ளவர்தான்.. எனவே, வீடியோ கால் மூலம் 2 பேருமே மதபோதனைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.. ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனம் ஒத்துப்போகவும், காதல் துளிர்க்க துவங்கியது.. இறுதியில், கடந்த மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரிக்கு அழைத்து வந்த மதபோதகர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் கல்யாணமும் செய்து கொண்டார்.

 ரூமில் பெண்

ரூமில் பெண்

ஆனால், இந்த காதல் திருமணத்திற்கு மதபோதகரின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்... தகராறும் செய்து வந்திருக்கிறார்கள்.. இந்தநிலையில் நேற்றிரவு சாப்பாடு வாங்குவதற்காக, மதபோதகர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து, அவரது உறவினர்கள் திடீரென வீட்டு முன்பு திரண்டு வந்துவிட்டனர்.. வீட்டுக்குள் இந்தோனேசிய பெண் தனியாக இருப்பதை அறிந்து, அவரை வீட்டிற்குள் ரூமில் வைத்து பூட்டி சிறை வைத்தனர்... உறவினர்களின் இந்த செயலை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

 போதகர் சாப்பாடு

போதகர் சாப்பாடு

சற்றுநேரத்தில் மதபோதகர் சாப்பாடு வாங்கி கொண்டு வந்தார்.. அப்போது, வீட்டிற்கு வெளியே திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ந்தார்.. மேலும் அவரால் வீட்டிற்குள் செல்ல முடியாதபடி கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன.. முன்பக்க கேட்டுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தன.. மனைவி வீட்டிற்குள் சிறைவைக்கப்பட்டதை பார்த்து மதபோதகர் பதற்றம் அடைந்தார்... இதனால் வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைப்பதற்காக 100-க்கு போன் செய்தார்.. "மனைவியை உறவினர்கள் வீட்டில் பூட்டி சிறை வைத்துவிட்டனர், தன்னை வெளியேற்றி விட்டனர், மனைவியின் உயிருக்கு ஆபத்து என்றும், தன்னையும் தன் மனைவியையும் காப்பாற்றுமாறு புகார் தந்தார்.

 பரிதவிப்பு

பரிதவிப்பு

உடனே சம்பவ இடத்திற்கு குளச்சல் போலீசார் விரைந்து வந்தனர்.. மதபோதகரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர். அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை தங்களால் ஏற்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டனர்.. மேலும், அந்த பெண்ணை விடுவிக்க முடியாது என்றும், மதபோதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தைகள் நீடித்தனவே தவிர, உறவினர்கள் சமாதானம் ஆகவில்லை.. இவர்கள் ஒருபக்கம் பேச்சு நடத்தினாலும், சிறை வைக்கப்பட்ட மனைவியை தன்னால் பார்க்க முடியாததால், பரிதவித்தபடியே துடித்து கொண்டிருந்தார் மதபோதகர்..

 பதைபதைப்பு

பதைபதைப்பு

இறுதியில் போலீசார், கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என்று உறவினர்களுக்கு எச்சரிக்கை தந்தனர்.. அதற்கு பிறகே, போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்... போதகரும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்... குளச்சல் ஸ்டேஷனுக்கு 2 தரப்பையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சொல்லிவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர்.. அதுமட்டுமல்ல, நள்ளிரவில் இருந்தே, அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க, போதகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. 62 வயதில் இந்தோனேசிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..!

English summary
Kanniyakumari Pastors marriage and relatives locked the pastors wife in the house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X