Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்தரங்க படம்".. ப்ராமிஸ், உன்கிட்ட தான்டீ பேசறேன்".. பாதிரியாரை பிடிக்க பெங்களூரு விரைந்தது போலீஸ்

கன்னியாகுமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸ் அவரை தேடிவருகிறது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: குமரி பாதிரியார் பெனடிக் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. பெங்களூருவில் அவர் பதுங்கியுள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் பெனடிக்ட் ஆன்ட்ரோ.. 29 வயதாகிறது.. சர்ச்சுக்கு வருபவர்களுக்கு இவர் பாவமன்னிப்பு வழங்கி வந்தார்.

ஆனால், பாவமன்னிப்பு கேட்டு வரும் பெண்களிடம், டபுள் மீனிங்கில் பேசி, சில்மிஷம் செய்து வந்துள்ளார்.. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி, பாவ மன்னிப்பு கேட்டு பாதிரியாரிடம் வந்த நிலையில், அவரிடமும் பாதிரியார் அத்துமீறி இருக்கிறார்.

அட்டகாசங்கள்

அட்டகாசங்கள்

அத்துடன், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், தன்னிடம் சொன்ன ரகசியத்தை வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணுடன் நெருக்கமாகவும் இருந்து வந்ததாக தெரிகிறது.. ஒருகட்டத்தில், பாதிரியாரின் அட்டகாசங்கள் எல்லைமீறி போய்விடவும், நடந்த சம்பவங்கள் அனைத்தையும், தன்னுடைய நண்பரும், சட்டக்கல்லூரி மாணவருமான ஆஸ்டின் ஜியோவிடம் சொல்லி அழுதுள்ளார் மாணவி. இதைக்கேட்டு அதிர்ந்துபோன ஆஸ்டின், சில நாட்களில், நண்பர்களுடன் சர்ச்சுக்கு வந்து, பாதிரியாரை தாக்கியிருக்கிறார்.. அத்துடன் அவரது லேப்டாப்பையும் பறித்து சென்றுள்ளனர்.. இதுகுறித்து பாதிரியார் போலீசில் புகார் தர போகவும், ஆஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார்..

கலர் கலர் பொய்கள்

கலர் கலர் பொய்கள்

ஆஸ்டின் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளதால், மகனை விடுவிப்பதுடன், பாதிரியார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ஆலந்தட்டுவிளையை சேர்ந்த மினி அஜிதா என்பவர், எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக அஜிதாவிடம் எஸ்பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது... 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் வெளியானது எப்படி? என்று போலீஸார் கேட்டனர்.. அதற்கு அஜிதா, அந்த வீடியோக்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்..

ச்சேட்டிங்

ச்சேட்டிங்

இதனிடையே, பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்ட மாணவி ஒருவர் மார்ச் 11ம் தேதி எஸ்பி அலுவலகத்தில் இதே பாதிரியார் மீது பாலியல் புகார் தந்தார்.. பாதிரியார் தனக்கு ஆசி வழங்கும்போது தவறான முறையில் தொட்டு பேசினார். செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு தொந்தரவு செய்தார்.. மிரட்டி வருகிறார் என்று நர்சிங் மாணவி புகார் கொடுக்கவும், இதுதான் பாதிரியாரின் பாலியல் விவகார வழக்கு வேகம் எடுக்க காரணமாக இருந்து வருகிறது.. அதேபோல, கடந்த 13ம் தேதி காட்டாத்துறை அடுத்த ஆலந்தட்டு விளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் இதேபோல பாலியல் புகார் அளித்திருக்கிறார்..

சர்ச் புகார்

சர்ச் புகார்

பல இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.. இந்த சமயத்தில்தான், வேறு ஒரு மாணவியுடன் பாதிரியர் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பகீரை கிளப்பியது. இதையடுத்து, பாதிரியாரை வேறு சர்ச்சுக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது பிஷப் அலுவலகம்... எனினும், பாதிரியாரின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவர துவங்கி விட்டது.. கடந்த 4 நாட்களாகவே, பாதிரியார் பற்றின செய்திகள்தான் மீடியாவை ஆக்கிரமித்து குமரியை தகிக்க வைத்து வருகிறது.

நிர்வாண நிலை

நிர்வாண நிலை

இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் பேசுவது, முத்தமழை பொழிவது என்று பல்வேறு ஆபாச காட்சிகள் அதில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.. ஆபாசமான வாட்ஸ் அப் சாட்டிங் செய்த பதிவுகளும் வெளியாகி உள்ளன.. பாதிரியார் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடத்துவங்கி உள்ளனர்.. வழக்கு பதிவு செய்ததுமே பாதிரியார் திடீரென தலைமறைவானார்... அவர் தற்போது பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர் கைதானால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

ப்ராமிஸ் டி

ப்ராமிஸ் டி

இதனிடையே, பாதிரியாரின் ஒரு வாட்ஸ்அப் சேட்டிங் வாட்ஸ் பதிவுகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன... அதில், ஒரு பெண்ணிடம், "என் தூக்கத்தை கெடுத்து விட்டாய்... உன்னையே நினைத்து கொண்டு இருந்தேன்" என்று ஆரம்பித்து, காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.. உடனே எதிர்தரப்பில் சாட்டிங் செய்த பெண், "என்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவீர்களா?" என்று கேட்க, "யெஸ்.. உன்னிடம் மட்டும் தான்டீ இப்படி பேசுவேன்... பிராமிஸ் என்னை நம்பு' என்று பாதிரியார் பதிலளித்துள்ளார்.. பிராமிஸ் செய்த இந்த பாதிரியாரை தேடிக்கொண்டு போலீசார் பெங்களூர் சென்றுள்ளதால், விரைவில் அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 ஸ்கிரீன் ஷாட்ஸ்

ஸ்கிரீன் ஷாட்ஸ்

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தான் பணி செய்யும் இடங்களில் எல்லாம் சர்ச்சுக்கு வரும் இளம்பெண்களிடம் சேட்டை செய்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் இவர் விட்டுவைக்கவில்லை என்கிறார்கள்.. பிரார்த்தனையின்போது ஆறுதல் சொல்வது போல் தன் வலையில் வீழ்த்திவந்திருக்கிறார்.. யாரிடம் நெருங்கி பழகினாலும், அதை வீடியோவாக எடுத்து கொள்வாராம்.. அதேபோல, வாட்ஸ் அப் கால், செய்தாலும் அல்லது மெசேஜ் அனுப்பினாலும் அதையும் ஸ்கிரீன்ஷாட்கள் எடுத்துவைத்துக்கொண்டு பாலியல் தொல்லை செய்து மிரட்டுவாராம்.. சிலர் ஒத்துழைப்பு கொடுத்ததால் அவரும் பிளேபாய் போல் அதைச் செய்துவந்ததாக சொல்கிறார்கள்..

மெசேஜ்

மெசேஜ்

இப்போதைக்கு 10-க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் மிக, மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்மீதான புகார்கள் இனியும் அதிகமாகும் என்கிறார்கள். அதேசமயம், இதுவரை வெளியாகி உள்ள வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஆகியவைகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணியும் துரிதமாக துவங்கி உள்ளதாம்.

 ஹார்ட்டிஸ்க்

ஹார்ட்டிஸ்க்

இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் சொல்லப்படும்போது, பாதிரியாரிடம் இன்னொரு லேப்டாப் இருப்பதாக சொல்லப்படுகிறது... பாதிரியார் தலைமறைவாகியுள்ளதால் அந்த லேப்டாப்பை போலீசாரால் உடனடியாக கைப்பற்ற முடியவில்லை. பாதிரியார் கைது செய்யப்படும்போதுதான், அவரிடம் உள்ள செல்போன் ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என்கிறார்கள். ஒருவேளை அவரிடம் உள்ள மின்சாதனப் பொருட்களில் இருந்து வீடியோ, போட்டோக்கள் அளிக்கப்பட்டிருந்தால், தடயங்களை அழித்ததாக கூடுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் மீட்டெடுக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீஸார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

 அந்தரங்க பகுதி

அந்தரங்க பகுதி

பேச்சுப் பாறையை சேர்ந்த 19 வயது பெண் தந்த புகாரில், "பெனடிக் ஆன்றோ பேச்சுப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்தபோது நான் அங்கு பிரார்த்தனைக்காக சென்றேன். அப்போது பாதிரியார் என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தார். என் உடலை மோசமாக தொட்டு கூச்சப்படுத்தினார். அதன் பின்னர் வாட்ஸப் மூலம் என் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பினார். அவரது அந்தரங்க பகுதியினை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்" என்று கூறியிருக்கிறார்... பேச்சுப் பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றலாகி சென்ற பின்னரும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தினார் என்று புகாரில் அந்த பெண் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+