கன்னியாகுமரியில் வெல்வது யார்? விஜய் வசந்த் vs பொன் ராதாகிருஷ்ணன்? அதிமுக தான் ஹைலைட்.. தந்திடிவி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸின் விஜய் வசந்த் வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் 2வது இடமே பிடிப்பார் என்றும் தந்தி டிவி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி தொகுதி முக்கடலும் சங்கமிக்கும் இடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையும் இங்கு இருக்கிறது. கேரளாவிலிருந்து பிரிந்து வந்த மாவட்டம் என்பதால் இங்கு கணிசமாக மலையாளிகளும் வசிக்கிறார்கள். தமிழகத்தின் மற்ற பகுதியை போல் இல்லாம கேரளாவைப் போன்ற தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதியாக இருக்கிறது.

கன்னியாகுமரியை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாகவே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கணிசமாக செல்வாக்கு இருக்கிறது. இங்கு பலமுறை காங்கிரஸ் வென்றுள்ளது பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒருமுறை வென்றுள்ளன. இங்கு அதிமுக தனியா போட்டியிட்டு வெற்றி பெற்றதே இல்லை.
இந்த தொகுதியில் இந்த 2021ல் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் சுமார் ஒன்றே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்பு விஜய் வசந்தின் தந்தை மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்தகுமார் 2019ல் நடந்த பொதுத்தேர்தலில் இரண்டே முக்கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய அளவில் வென்றார்.
இந்த சூழலில் விஜய் வசந்த் 2024 தேர்தலில் மீண்டும் களம் இறங்கி உள்ளார். பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் பசிலியன் நசரேத் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் யார் வெல்வார்கள் என்பது குறித்து தந்திடிவி தேர்தலுக்கு பிந்தைய கணிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள விஜய் வசந்த் 40 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் 36 சதவீதம் வாக்குகள் பெற்று கடும் போட்டி அளிப்பார் என்றும், அதிமுக வேட்பாளர் பசிலியன் நசரேத் 16 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுவார் என்றும் கணித்துள்ளது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications