Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி கேவலம்.. மளிகைக் கடையில் அடுத்தவர் மனைவிக்கு பாஜக பிரமுகர் முத்தம்? அருமனை அக்கப்போரு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பாஜக பிரமுகரை, போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள். மளிகை கடை வைத்து நடத்தி வருபவர், தந்த புகாரின்பேரில், அருமனை போலீசார், பாஜக பிரமுகரை தேடி வருகிறார்கள். என்ன நடந்தது அருமனையில்?

சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில், பெண் டாக்டர் ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக பிரமுகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது, தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்த 50 வயதான நாஞ்சில் ஜெயக்குமார், பாஜகவில் பிரமுகராக உள்ளார்.

kanyakumari arumanai

பெண் டாக்டர்: இவர் சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, அங்கிருந்த பெண் டாக்டர் முன்பு ஆபாசமான முறையில் அமர்ந்திருந்தாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், அவரை கண்டித்துள்ளார். அப்போது டாக்டரை ஆபாசமாக பேசி மிரட்டி சென்றிருக்கிறார் நாஞ்சில் ஜெயக்குமார். அத்துடன், போனில் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியிருக்கிறார்

அதுமட்டுமல்ல, பெண் டாக்டரின் போட்டோவையும் மார்பிங் செய்து தன்னுடைய செல்போனில் வைத்திருப்பதாகவும், ஆசைக்கு இணங்க மறுத்தால் வெப்சைட்டில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நாஞ்சில் ஜெயக்குமாரை கைது செய்திருந்தனர்..

குண்டர் சட்டம்: நிறைய பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்தது தொடர்பான வழக்குகள் நாஞ்சில் ஜெயக்குமார் மீது உள்ளதாம்.. இவர் குண்டர் சட்டத்திலும் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டவர்.. இவர் மீதான வழக்குகள் இன்னமும் விசாரணையில் இருந்து வரும்நிலையில், இந்த பாலியல் புகார் மிகப்பெரிய பரபரப்பை அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இதே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.. அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார்.. இவரை எல்லாரும் அனிகுட்டன் என்று கூப்பிடுவார்களாம்.. 48 வயதாகிறது.. ஆட்டோ ஓட்டுகிறார்.

இவரது மனைவி பெயர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 40 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. உமா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.. இந்த தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடப்பது வழக்கமாம்.

மளிகை கடை: இந்தநிலையில் சம்பவத்தன்று, பத்துகாணி நிஜாபவன் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார் என்பவர், உமாவின் மளிகை கடைக்கு சென்றுள்ளார்.. அப்போது திடீரென அவர், உமாவுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிகுட்டன், மனைவியை கடுமையாக திட்டியதுடன், கண்டித்துள்ளார்.. அதேபோல, பாஜக பிரமுகரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மதுகுமார், அனில் குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிஓடிவிட்டாராம்.. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, அனில்குமார் ஆறுகாணி போலீசில் புகார் அளித்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசாரும், தலைமறைவான மதுகுமாரை தற்போது தேடி கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் தோல்வி: தலைமறைவான மதுகுமாருக்கு 52 வயதாகிறது.. ஆறுகாணி கிளை பாஜக செயலாளராக இருப்பவராம்.. அத்துடன், கடையாலுமூடு பேரூராட்சி 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டாராம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+