குமரி மாவட்ட மக்களை பதற வைக்கும் ‘அரிக்கொம்பன்’.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்!
கன்னியாகுமரி: அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் யானை விடப்பட்டது.

ஆனால் அரிக்கொம்பன் யானையானது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தமிழ்நாட்டின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வந்தது. கடந்த மே மாதம் 26ஆம் தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் மக்கள் நிறைந்த பகுதிக்கு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்பம் நகருக்குள்ளும் அரிக்கொம்பன் யானை வலம் வரத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ஒரு வார போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானையை பிடித்தனர். அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அரிக்கொம்பன் யானை அப்பர் கோதையாறில் முத்துக்குழிவயல் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
முத்துக்குழிவயலில் பெரும்பாலான பகுதி குமரி வனப்பகுதியை சேர்ந்தது. எனவே, அந்த பகுதியில் விடப்பட்ட யானை கன்னியாகுமரி பகுதிக்குள் வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு முண்டந்துறை வனப்பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் யானையின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேடியோ காலர் கருவி யானையின் இருப்பிடத்தை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தெரிவித்துக் கொண்டே இருக்கும் என்பதால், யானை மக்கள் வசிக்கும் இடத்துக்கு வருவது தெரிந்தால் முன்கூட்டியே தகவல் கிடைத்து விடும்.
அரிக்கொம்பன் யானை தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து இந்த யானையானது வன அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications