நீங்களும் ஸ்டூடன்ட்டாதானே இருந்தீங்க! மழைல ஸ்கூல் போறது கஷ்டம் ! குமரி கலெக்டருக்கு மாணவர்கள் SMS

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு அந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்புக்கு மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை பகிர்ந்து மழை பரிதாபங்கள் என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் வரும் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம், பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.

Kanyakumari Collector

இந்த நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

Kanyakumari Collector

சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்கு கூட தண்ணீர் புகுந்துவிட்டது. அது போல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அங்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

Kanyakumari Collector

இந்த நிலையில் அதி கனமழையால் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை பெய்தது.

Kanyakumari Collector

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் விடுமுறை எப்போது விடுவார்கள் என காத்திருந்தனர். ஆனாலும் ஆட்சியர் எந்த விடுமுறையையும் அறிவிக்ககாததால் விரக்தி அடைந்த அவர்கள், ஆட்சியருக்கு லீவு கேட்டு மெசேஜ் அனுப்பத் தொடங்கிவிட்டனர்.

Kanyakumari Collector

அதில் குறிப்பிட்ட காமெடியான மெசேஜ்களை எடுத்து மாவட்ட ஆட்சியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மழை பரிதாபங்கள் என்ற பெயரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு மாணவன் "ஹலோ சார், கன்னியாகுமரிக்கு லீவு விடுங்க சார் பிளீஸ்,. இங்க நல்ல மழை, ஃபுல்லா நீர் தேங்கியிருக்கு, யூனிபார்ம்லாம் ஈரமா இருக்கு, ஈரமான யூனிபார்ம் அ போட்டுட்டு போக வேண்டியதாக இருக்கு ஸ்கூலுக்கு! ப்ளீஸ் சார், சகதியா இருக்கு ரொம்ப பேக் வேற வெயிட்டா, அத தூக்கிட்டு சகதியில் போக நல்ல பயமாக இருக்கு விழுந்துடுவோனோனு!" இவ்வாறு அந்த மாணவன் மெசேஜ் போட்டுள்ளான்.

Kanyakumari Collector

அது போல் "எலே மரியாதையா கேக்குறேன் லீவு கொடுங்க சாரே, மழை பெய்துகிட்டே இருக்கு, லீவு கொடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு மாணவன், "நாளைக்கு தேர்வு இருக்கு, ஸ்கூல் இருக்கா இல்லை லீவா இப்பவே சொல்லிடுங்க, அதிலும் கணக்கு தேர்வு இருக்கு, லீவே கொடுத்துடுங்கள்" என தெரிவித்துள்ளான்.

Kanyakumari Collector

"இடி மின்னலோட கன்னியாகுமரில மழை பெய்யுது, ஜன்னலை திறந்து பாருங்கள் , தெரியும், லீவு கொடுங்க", "நாங்க பாவம் சார்", என இரு வேறு மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அது போல் இன்னொரு மாணவர், "நீங்களும் முதலில் ஒரு மாணவனா தான் இருந்து இந்த பொசிசனுக்கு வந்தீங்க, ஸ்டூடன்ஸ்ட் இந்த ரெயின்ல ஸ்கூல் போறது எவ்வளவு கஷ்டம்னு புரியும்னு நினைக்கிறேன், இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்கள் சார், நாளைக்கு மட்டும் லீவு கொடுங்கள்" என இந்த மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kanyakumari Collector

இதையெல்லாம் படித்து பார்த்து சிரித்திருந்த ஆட்சியர், அதை கம்பைல் செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்ஸாக வெளியிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை படித்து பார்த்து சிரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+