சிறுவனுடன் உடலுறவு.. கர்ப்பமான காலேஜ் மாணவி! கதிகலங்கிப் போன கன்னியாகுமரி! ஷாக் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: அடக் கொடுமையே... இப்படியும் நடக்குமா? என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரியில் சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு கர்ப்பமாகிய இளம் பெண் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மார்த்தாண்டம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாத கர்ப்பிணியாக உள்ள இளம்பெண் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், இதுகுறித்த பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சார்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்களின் பரிசோதனையில் இளம்பெண் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் கணவரின் விவரம் குறித்து கேட்கும் போது கணவரின் விவரத்தை கூறாமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மார்த்தாண்டம் மகளிர் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Kanyakumari POCSO crime

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின - ஆற்றூர் பகுதியை சார்ந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான டிப்ளமோ படிப்பை குழித்துறை பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்து வந்துள்ளார். அதே கல்வி நிலையத்தில் அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சார்ந்த 17 வயது சிறுவனும் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்தப் பாடப்பிரிவில் இந்த இருவர்கள் மட்டும் தான் படித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கமும் அதிகமாகி உள்ளது. இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

தொடர்ந்து பழக்கம் அதிகமாகி களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் தனியாக சென்று சிறுவனை கட்டாயப்படுத்தி இந்த இளம் பெண் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பலமுறை இந்த உடலுறவு தொடர்ந்துள்ளது. இதில் இளம்பெண்ணும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

எனினும் வீட்டாரிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்த நிலையில் தான் அரசு மருத்துவமனைக்கு சென்ற பிறகு எட்டு மாதமாக கர்ப்பமான விஷயம் வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கட்டாயப்படுத்தி அவனது வீட்டிற்கு சென்று உடலுறவில் ஈடுபட்டதாக சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் இளம் பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 8 மாத கர்ப்பிணியாக உள்ள இளம்பெண் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாக போலீசார் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு செய்ததில் இளம் பெண் கர்ப்பமாகிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அடுத்த நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+