சாப்பிட கூப்பிட போன தாய்.. ஸ்ரீமதியின் கோலத்தை பார்த்து அலறல்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மதியம் சாப்பிட அழைப்பதற்காக அறையின் கதவை தட்டிய அம்மாவிற்கு மகளின் செயல் பேரதிர்ச்சியை தந்தது. அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி இந்த விபரீத முடிவினை எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பனச்சமூடு பாறைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் திலீப்குமார். இவருடைய மகள் 20 வயதாகும் பத்மஸ்ரீ( பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி சைக்காலஜி படித்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் வியாழக்கிழமை காலையில் மாணவி பத்மஸ்ரீ வந்துள்ளார். திருவனந்தபுரம் வந்த உடன் மகளை திலீப்குமார் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். வீட்டில் அழைத்து வந்து விட்ட பின்னர் திலீப்குமார் காவலாளியாக பணிவேலைக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே பத்மஸ்ரீ காலையில் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். மகள் அறையில் தூங்குவதாக நினைத்துக் கொண்டிருந்த அவரது அவரது தாய் , அவரை கண்டு கொள்ளவில்லை. மதியம் பத்மஸ்ரீயை அவரது தாயார் சாப்பிட அழைத்துள்ளார் ஆனால் எழுந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் அறைக்கு சென்று பார்த்திருக்கிறார்.
அப்போது, பத்மஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். அதிர்ச்சியில் அவர் அலறிய நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளார்கள். இதையடுத்து உடனடியாக பத்மஸ்ரீயின் தந்தை திலீப்குமாருக்கும், அருமனை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பத்மஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பத்மஸ்ரீ தன்னுடன் படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவரும் காதலித்து வந்திருக்கிறாராம். பத்மஸ்ரீயின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.இந்த விவகாரத்தால் மனமுடைந்த பத்மஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தடுப்பு எண்: தற்கொலை எண்ணம் வந்தால் தயவு செய்து அரசின் 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications