கன்னியாகுமரி கூட்டுறவு சங்க ஆவணங்களை பிரித்ததுமே அலறிய அதிகாரிகள்.. ரூ.17.15 கோடி பின்னணியில் 4 பேர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: விவசாயக் கடன், பயிர்க்கடன் என அவசரத் தேவைகளுக்கு கூட்டுறவு சங்கங்களை நம்பி செல்லும் மக்களின் பணத்திலேயே ரூ.17.15 கோடி மோசடி இப்போது நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் கூட்டுறவு நிறுவன மோசடிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த முறை 10 ஆண்டுகளாக நடந்த முறைகேட்டில் 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது..

Kanyakumari Cooperative Society Cooperative Society Fraud Financial Irregularities

கன்னியாகுமரி வேளாண்மை கூட்டுறவுக் கடன்

சுற்றுவட்டாரத்தில் பிரபலமான இந்த சங்கத்தில் தேவசாம் பால்ராஜ் (64) செயலாளராக பணியாற்றி வந்தார். நடராஜ் (63), பூதலிங்கம்பிள்ளை (63) ஆகியோர் உதவி செயலாளர்களாகவும், விஜயகுமாரி (68) எழுத்தராகவும் பணியாற்றி வந்தனர்... இவர்கள் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூட்டுறவுச் சங்க அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புகார்கள் வந்தவண்ணம் இருந்தன..

கடன் வழங்குவதில் முறைகேடு

ஏகப்பட்ட புகார்கள் வந்ததால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். துணைக் காவல் கண்காணிப்பாளர் பர்ணபாஸ் தலைமையிலான விசாரணைக் குழுவினர் நடத்திய விசாரணையில் பல ஆண்டுகளாக நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாக ஆரம்பித்தன..

அதாவது கடந்த 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன், பயிர்க்கடன் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் ஆகியவற்றில் இவர்கள் முறைகேடு செய்திருக்கிறார்களாம்.. இதன் மூலம் சுமார் ரூ.17 கோடியே 15 லட்சம் மோசடியில் இவர்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து தேவசாம் பால்ராஜ், நடராஜ், பூதலிங்கம்பிள்ளை, விஜயகுமாரி ஆகிய 4 பேரையும் தற்போது போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.

ஆரல்வாய்மொழியில் ரூ.2.65 கோடி மோசடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் மோசடி புகார்கள் எழுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.. இதேபோல கடந்த ஜூன் மாதம் ஆரல்வாய்மொழியிலுள்ள கூட்டுறவு வங்கியிலும் ரூ.2.65 கோடி அளவுக்கு நகை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த அசல் தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்திருக்கிறார்கள்.. அந்த வங்கியில் வழக்கமான தணிக்கை நடந்தபோதுதான், இப்படியொரு அக்கிரமம் தெரியவந்தது. இந்த வழக்கில் வங்கி எழுத்தர் முத்துகிருஷ்ணன் உட்பட 7 பேர் சிக்கினார்கள்.

கூட்டுறவு சங்கங்கள் மீது எழும் கேள்வி

ஏற்கனவே நகை மோசடி, இப்போது கடன் வழங்கியதில் முறைகேடு என கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விவசாயக் கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக கூட்டுறவு சங்கங்களை நம்பியிருக்கும் மக்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, பணம் எங்கே சென்றது என்பது குறித்த விவரங்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் தெரியவரும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+