கன்னியாகுமரி பரபரப்பு.. எஜமானரை காப்பாற்ற 7 அடி பாம்பை குதறிய நாய் சிஞ்சான்! நெஞ்சை உலுக்கிய தியாகம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே எஜமானியை காப்பாற்ற 7 அடி பாம்பை குதறியுள்ளது வளர்ப்பு நாய் சிஞ்சான்.. இந்த நெஞ்சை உலுக்கிய தியாகம், பிரம்மபுரம் பகுதியில் ஒட்டுமொத்த கிராம மக்களையும் கண்கலங்க செய்துவிட்டது.. சிஞ்சானை கட்டிப்பிடித்து எஜமானி குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை உலுக்கி எடுத்து விட்டது.. என்ன நடந்தது?

தங்களுக்கு தினமும் உணவளித்து பாசத்துடன் வளர்த்த எஜமானர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, 2 வயதுடைய வளர்ப்பு நாய் ஒன்று சீறிப்பாய்ந்து வந்த 7 அடி நீளமுள்ள பயங்கர நச்சுத்தன்மை கொண்ட நல்லபாம்புடன் ஆக்ரோஷமாகப் போராடி, இறுதியில் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari Chinchan Pet Dog 7-Foot Snake Animals 7

கன்னியாகுமரி 7 அடி நல்ல பாம்பு

பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ்.. 35 வயதாகிறது.. இவர் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களுடன் காயத்ரியின் அம்மா பத்மகுமாரியும் அதே வீட்டில் வசித்து வருகிறார். விகேஷின் குடும்பத்தினர் தங்களது வீட்டில் கடந்த 2 வருடங்களாக சிஞ்சான் என்ற ஆண் நாய் ஒன்றை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.. அந்த நாய் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் மிகுந்த பாசத்துடனும் விசுவாசத்துடனும் பழகக்கூடியது..

திண்ணையில் படமெடுத்த பாம்பு

நேற்று முன்தினம் சாயங்காலம், பத்மகுமாரி வீட்டின் பின்புறம் உள்ள திண்ணைப் பகுதியில் உட்கார்ந்து, இரவு சமையல் செய்வதற்கான வேலைகளில் பிஸியாக இருந்துள்ளாய். சமையலுக்கு தேவையான காய்கறிகள், மற்ற பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாராம்.

அப்போது வீட்டின் பின்புறப் புதர்ப் பகுதியிலிருந்து சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அந்த பாம்பு, பத்மகுமாரி உட்கார்ந்திருந்த இடத்திற்கு பக்கத்திலேயே வந்து, படமெடுத்து நின்றுள்ளது.. இதை பார்த்ததுமே பதறி அதிர்ச்சியில் நிலைகுலைந்தார் பத்மகுமாரி, பயத்தில் அலறித் துடித்துக் கூச்சலிட்டார்.


பாய்ந்த வந்த சிஞ்சான்

அந்த சத்தத்தை கேட்டதுமே, வீட்டிற்குள்ளிருந்த\ விகேஷும் அவரது மனைவி காயத்ரியும் பதறியடித்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் ஓடி வந்தனர். அதேபோல வீட்டின் முன்புற வாசலில் படுத்திருந்த செல்ல நாய் சிஞ்சான், அந்த ஆபத்துக் குரலைக் கேட்ட அடுத்த நொடியே வீட்டின் பின்புறம் பாய்ந்து வந்தது. தன் எஜமானிக்கு முன்னால் படம் எடுத்து கொண்டிருந்த விஷப் பாம்பைக் கண்டதும், சிஞ்சான் கொஞ்சமும் யோசிக்காமல் பாம்பின் மீது பாய்ந்து பாய்ந்து கவ்விப் பிடிக்க முயன்றது.

இதனால் கோபமடைந்த அந்த 7 அடி நீள நாகப்பாம்பு, சிஞ்சானை நோக்கி மிக ஆக்ரோஷமாகச் சீறியது.. சிஞ்சான் உடலில் பலமாக கடித்தது.. இதனால் சிஞ்சான் உடம்பில் விஷம் ஏறத்தொடங்கியது-. ஆனாலும் சிஞ்சான் விடவில்லை.. தன் எஜமானியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத்தில், ஆவேசத்துடன் பாம்பை தாக்க கடித்துக் குதறியது.. இதனால் அந்த நல்ல பாம்பு 2 துண்டானது.. உடல் துண்டான அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

கடித்து குதறிய வளர்ப்பு நாய்

பாம்பு இறந்ததை சிஞ்சான் உறுதி செய்தது.. ஆனால் சில நிமிடங்களிலேயே, பாம்பின் விஷம் உடம்பெல்லாம் பரவி, தலைக்கும் ஏறிவிட்டதால், சிஞ்சான் அங்கேயே விழுந்து இறந்தது.. இதைக்கண்டு குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதனர். தன் உயிரைத் தந்து தங்களைக் காப்பாற்றிய சிஞ்சானை கட்டிப்பிடித்து பத்மகுமாரி உட்பட குடும்பமே கண்ணீர் வடித்த காட்சி பார்ப்போரை கலங்க வைத்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கன்னியாகுமரி மக்களும் நெகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+