Exclusive: கன்னியாகுமரி தொகுதியை சர்வதேச அளவுக்கான சுற்றுலா தலமாக்குவேன்: விஜய் வசந்த்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் சர்வதேச அளவில் சுற்றுலா மேம்பாடு செய்வேன் மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார் விஜய் வசந்த். தனது வெற்றி வாய்ப்பு பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக பேசியுள்ளார் விஜய் வசந்த்.
மக்களவைத் தேர்தலில், அனைவராலும் உற்று கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்று கன்னியாகுமரி. கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி விஜய் வசந்த், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் உட்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படும் கன்னியாகுமரி தொகுதி ஏற்கனவே பாஜகவுக்கு வெற்றியைக் கொடுத்த தொகுதி. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே வலுவாக உள்ள பகுதி. குமரி முனையில் இந்த முறை வெல்லப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நமது ஒன் இந்தியா தமிழுக்கு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியில் விஜய் வசந்த் பேசுகையில், "மத்தியில் பாஜக ஆட்சி நிலவி வரும் நிலையில் இங்கு காங்கிரஸ் எம்.பியாக நான் இருப்பதால் பல்வேறு தடைகளைக் கடந்து பல நல்ல திட்டங்களை கன்னியாகுமரி தொகுதியில் செயல்படுத்தி உள்ளேன். இந்த முறை முழுமையாக 5 ஆண்டுகள் மீண்டும் கிடைத்தால் குமரிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வருவேன்." என்றார்.
தொடர்ந்து தனக்கு இருக்கும் சவால் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய விஜய் வசந்த், "தமிழ்நாட்டில் மற்ற 38 தொகுதிகளில் நிலைமை வேறு. ஆனால் குமரி தொகுதியில் எப்போதும் பாஜக - காங்கிரஸ் இடையே தான் போட்டி நடக்கும். கேரளா எல்லையில் இருப்பதால், அரசியல் ரீதியாக அதன் தாக்கம் இருக்கும். ஆட்சி மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
இந்த முறை மோடி அரசின் மீதான எதிர்ப்பலை கடுமையாக இருக்கிறது. தமிழக அரசின் சாதனைகள் உதவிகரமாக இருக்கிறது. எனவே இந்த முறை எங்கள் கூட்டணி வெற்றி உறுதி." எனத் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகள் பற்றி பேசிய விஜய் வசந்த், "மீனவர்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது, கன்னியாகுமரி தொகுதியில் சர்வதேச அளவில் சுற்றுலா மேம்பாடு செய்வது ஆகிய முக்கியமான வாக்குறுதிகளை முன்னெடுக்கிறேன். இயற்கை அழகு வாய்ந்த குமரியை சுற்றுலா தலமாக மேம்பாடு செய்வதால், ஒட்டுமொத்தமாக மாவட்டம் வளர்ச்சியைப் பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications