மனைவியை துரத்தி துரத்தி வந்த கொத்தனார்.. மறக்க முடியாமல் மெசேஜ் அனுப்பி.. கடைசியில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: காதல் விவகாரத்தில் ஏற்படும் பிரச்சினைகள் சில நேரங்களில் விபரீதமாக முடிந்துவிடுகின்றன. அப்படியொரு சம்பவம்தான் 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து அதிர்ச்சியை தந்துவிட்டது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான நிலையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், மேலப்புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த தங்கமலர் (26) என்பவரை சுமார் 7 வருடங்களாகக் காதலித்து வந்திருக்கிறார்.

Kanyakumari Love Affair Crime Attempted Murder Case

கன்னியாகுமரி பறக்கை

ஆனால், கடந்த 6 மாதங்களாக தங்கமலர் விவேக்கிடம் பழகுவதை குறைத்து வந்துள்ளார்.. பிறகு மெல்ல மெல்ல பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே, பழவிளை அருகே பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கப்பல் ஊழியரான திவேக் (28) என்பவருடன் தங்கமலருக்கு திருமணம் நடைபெற்றது.

தங்கமலருக்கு திருமணமான பிறகும் விவேக் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்திருக்கிறார்.. பழைய காதல் விவகாரத்தை பேசியதுடன், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கொத்தனார் வலியுறுத்தினாராம். ஆனால், தங்கமலர் தொடர்ந்து கொத்தனாரை அவாய்டு செய்துள்ளார்.. போன் வந்தாலும், அவைகளையும் தவிர்தத்து வந்துள்ளார்.

உன் மனைவியை மறக்க முடியல

இதனால் உச்சக்கட்ட வெறுப்பும், ஆத்திரமும் அடைந்த கொத்தனார், வேறுவழியில்லாமல், தங்கமலரின் கணவர் திவேக்கின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டார்.. உன் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை என்று மெசேஜில் தெரிவித்திருக்கிறார் கொத்தனார். இதை பார்த்து திவேக், தங்கமலர் 2 பேருமே அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணிக்கு, விவேக் தன்னுடைய பைக்கில், தங்கமலர் வீட்டையே சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.. இதனால் திவேக், தங்கமலர் இருவரும், தங்களது உறவினரான கீழமாவிளையைச் சேர்ந்த சுயம்புலிங்கம் (32) என்பவரை காரில் அழைத்து கொண்டு, விவேக்கை தேடி சென்றிருக்கிறார்கள்.

விவேக் - தங்கமலர் காதல்

பறக்கை அருகே திருநகர் ஜங்ஷனிவில் விவேக் சென்றுகொண்டிருந்தபோது, அவரது டூவீலர் மீது காரை மோதியுள்ளனர். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த விவேக்கை காரில் வந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டார்கள்.

இந்த தாக்குதலில் விவேக்கின் தலையின் பின்பகுதி, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து எகிறி தப்பி விட்டனர்..

Kanyakumari Love Affair Crime Attempted Murder Case

சீரியஸ் கண்டிஷன்

படுகாயமடைந்த விவேக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... இதுகுறித்து விவேக்கின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திவேக், தங்கமலர் உள்ளிட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து திவேக், தங்கமலர், தங்கச்செல்வன் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுயம்புலிங்கத்தை தேடி வருகின்றனர்.

சம்பளத்தை காதலிக்கு கொட்டி

விவேக்கை பொறுத்தவரை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறாராம்.. ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக கொத்தனார் வேலை செய்து வருகிறார்.. தங்கமலரை காலேஜ் படிக்கும்போதிருந்தே காதலித்துள்ளார்.. தன்னுடைய எதிர்கால வாழ்க்கை தங்கமலருடன்தான் என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார்.. அதனால்தான், கஷ்டப்பட்டு கொத்தனார் வேலை பார்த்தாலும், அந்த பணத்தையெல்லாம் தங்கமலருக்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்திருக்கிறார்..

அதுமட்டுமல்ல, திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ, புது வீட்டை கட்டியிருக்கிறார் விவேக்.. திருமணமாகி வந்து தன்னுடைய வீட்டில் தங்கமலர் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்கனவே வாங்கி குவித்து வைத்துள்ளாராம்..

நொறுங்கிய காதலன்

இதற்கு நடுவில்தான், விவேக்குக்கு தெரியாமல், தங்கமலர் வசதியான நபரை திருமணம் செய்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்ததுமே விவேக் சுக்குநூறாக உடைந்து விட்டாராம்.. திருமணம் செய்ததை ஏற்க முடியாமல், தங்கமலருடன் பேச பல வழிகளில் முயன்றிருக்கிறார்.. அதில் தோல்வி மேல் தோல்வி கிடைக்கவும்தான், வேறு வழியின்றி தங்கமலரின் கணவருக்கே மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

7 வருடங்களாக தங்கமலரை உயிருக்கு உயிராக காதலித்த விவேக்கால், அவருக்கு வேறொருவருடன் திருமணமானதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த காதல் விவகாரம் கடைசியில் அரிவாள் வெட்டு, கொலை முயக்கு வழக்கு என விபரீதத்தில் முடிந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தை அதிர வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+