கன்னியாகுமரி கிட்ட பரபரப்பு.. காட்பாடி சலூன் கடையிலிருந்து திபுதிபுனு ஓடிய நபர்! வேலூர் போலீஸ் சபாஷ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் வேலூர் என இரு மாவட்டங்களில் ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே சலூன் கடைக்காரர்கள்.. இருவருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். என்ன நடந்தது இவர்களுக்கு?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் தவுபீக்.. 24 வயதாகிறது.. இவர் நாகர்கோவில் அடுத்த எறும்புக்காடு சந்திப்பில் சலூன் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.. சம்பவத்தன்று இவரது கடைக்கு 6 சிறுவர்கள் முடிவெட்டிக் கொள்ள வந்திருக்கிறார்கள்.

6 பேருமே முடி திருத்தம் செய்து கொண்டு, பணம் கொடுக்காமல் கிளம்பியிருக்கிறார்கள்.. இதுகுறித்து தவுபீக் கேட்டதற்கு, அந்த 6 பேரும் தகராறு செய்துள்ளனர்.. அத்துடன், கடையில் இருந்த தவுபீக் மற்றும் ஊழியர் அரபாஜியை தாக்கி, கத்தியாலும் குத்திவிட்டார்கள்.. இதில், இருவருமே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.. அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்லும்போது, சலூன் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு போய்விட்டார்கள்..
சிறுவர்கள்: இது குறித்து தவுபீக் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.. இறுதியாக, நாகர்கோவில் குருசடி, ராமன்புதூர் பகுதிகளை சேர்ந்த 6 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 3 பேர் மட்டும் கைதாகி உள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, வேலூர் மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.. காட்பாடி காந்திநகர் அருகே வணிகவளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு கடந்த 22-ந் தேதி இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் விழுந்து கிடந்தார்.. அவரது உடம்பில் கத்திக்குத்து காணப்பட்டது.. இதையடுத்து தகவலறிந்து வந்த விருதம்பட்டு போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
விசாரணை: இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நபர் யார்? என்று விசாரணையில் களமிறங்கினர்.. இறுதியில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய அபனிசரணியா என்பது மட்டும் தெரியவந்தது. ஆனால், அவரை பற்றின வேறு எந்த தகவலும் போலீசுக்கு கிடைக்கவில்லை.. இதனால், இந்த கொலை வழக்கில், போலீசார் அதிதீவிரம் காட்டியதையடுத்து, கீழ்வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்ற சலூன்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையை எப்படி கண்டுபிடித்தார்கள்? கொலையாளி சலூன்கடைக்காரர்தான் என்பதை அறிந்துகொண்டனர் என்பது குறித்து போலீசார் சொல்லும்போது, "கொலை செய்யப்பட்ட வடமாநில நபர் அஸ்ஸாமில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வந்துள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே சாலையில் நடந்து சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அவர் எங்கெல்லாம் சென்றார்? என்று ஆய்வில் இறங்கினோம்.
சலூன் கடை: கொலை செய்யப்பட்ட வடமாநில நபர் கடைசியாக, தனியார் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஒரு சலூன் கடைக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக் கொண்டு வெளியே வந்ததும் கேமராவில் பதிவாகியிருந்தது.
அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், இறந்தவர் முடி திருத்தம் செய்துகொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே சலூன் கடையில் விசாரணை நடத்தினோம்.. அப்போது கடைக்காரர் விஜயராகவனுக்கும், இறந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
தகராறு: அதாவது, சம்பவத்தன்று சலூன்கடைக்கு வந்த வடமாநில நபர் முடி வெட்டிக் கொண்டார்.. ஆனால் அதற்கு பணம் கொடுக்கவில்லை. அதனால், கடைக்காரருக்கும், வடமாநில இளைஞருக்கும் தகராறு வெடித்துள்ளது.. இந்த மோதலில், விஜயராகவன் சவரகத்தியாலேயே, அபனிசரணியாவின் கழுத்தை அறுத்துவிட்டார். அங்கிருந்து வெளியே சென்றதுமே, வழியிலேயே சுருண்டு இறந்துள்ளார்" என்றனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசாரை, சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெகுவாக பாராட்டினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications