YouTube-இல் வீடியோ பார்த்து டயட்.. உடல் எடையைக் குறைக்க முயன்ற மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பர்ணட்டிவிளையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பழச்சாறுகளை மட்டுமே குடித்து வந்தவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக எந்தவித திட உணவுகளையும் சாப்பிடாமல் வெறும் பழச்சாறுகளையும், கடும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பீட்சா, பர்க்கர் என்று ஒருபக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பழக்கங்கள் அதிகரித்து வந்தாலும், இளைஞர்களிடைய ஃபிட்னஸ் மற்றும் உடல் பருமன் தொடர்பான விழிப்புணர்வுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிகமாக இருக்கும் உடல் எடையை குறைப்பது, ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையைக் கூட்டுவது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிருக்கே ஆபத்து
உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை முயற்சி செய்யும்போது உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் ஆரோக்கியமாக எடையைக் குறைப்பது, கூட்டுவது போன்றவற்றை செய்யலாம். ஆனால், சமூக வலைதளங்களில் கிடைக்கும் வீடியோக்களை கொண்டு முயற்சிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
கன்னியாகுமரி மாணவர் பலி
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பர்ணட்டிவிளையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு 17 வயதில் சக்தீஷ்வர் என்ற மகன் உள்ளார். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், என்ஜினீயரிங் கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதனை
அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்தீஷ்வர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் பருமன் குறைப்பு வீடியோ
17 வயதான சக்தீஷ்வர் உடல் பருமனால் கடுமையாக சிரமமடைந்து வந்துள்ளார். பிளஸ் 2 முடித்துவிட்டு என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்த சக்தீஷ்வர் உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதையடுத்து, உடல் எடையைக் குறைப்பதற்கான வீடியோக்களை யூடியூபில் தேடிப் பிடித்து, கடுமையான டயட்டை மேற்கொண்டு வந்துள்ளார்.
கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களாக ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். எந்த வகையான தின உணவுகளையும் சாப்பிடாமல் தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்த நிலையில், அவருக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.
பழச்சாறு டயட்
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார். இந்நிலையில், சக்தீஷ்வருக்கு நேற்று காலை கடுமையான சளித் தொல்லை ஏற்பட்ட நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
கண் தானம்
போலீஸார் சக்தீஷ்வரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அதற்குரிய மருத்துவர்களை அணுகி அவர்களது ஆலோசனையின் பேரிலேயே இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த மாணவரின் கண்களை பெற்றோர் தானமாக அளித்துள்ளனர் என்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications