கணவன் காட்டிய பாலியல் வீடியோ.. ஒப்பாரி வைத்த தவெக பெண்.. கன்னியாகுமரி பாரதியை சிக்க வைத்த 1 தடயம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கணவர் திடீரென உயிரிழந்ததால் கதறி அழுத மனைவி.. உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.. ஆனால், போலீசாருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகம், இந்த வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் திருப்பங்களை ஏற்படுத்தியது.. கடைசியில் 2 பேர் கைதாகி ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள்.. யார் இந்த பெண் பாரதி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பூங்கா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (43). பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்.. இவரது மனைவி பாரதி.. 37 வயதாகிறது.. குமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி இணை செயலாளராக உள்ளார்.

Kanyakumari TVK News Bharathi Case

கன்னியாகுமரி தவெக பாரதி

கடந்த 22-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென தனது கணவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, பாரதி அவரை வடசேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் சொல்லிவிட்டார்கள்..

இதனால் பாரதி உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கும் சுரேஷ் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் இறச்சகுளத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டுவந்த பாரதி, யாருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.

அழுது ஒப்பாரி வைத்த பாரதி

ஆனால், பிரபல ரவுடி சுரேஷ் இறந்த விஷயம், பூதப்பாண்டி போலீஸாருக்கு தெரியவந்தது.. உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர்.. சுரேஷின் உடலை பார்வையிட்டபோது, அவரது அவரது கழுத்துப் பகுதியில் காயங்களும் தழும்புகளும் கிடந்தன.. இதனால் சந்தேகப்பட்டு, அவரது உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்து செல்ல முயன்றனர்..

ஆனால், பாரதி அழுது ஒப்பாரி வைத்தார்.. "என் கணவரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய விட மாட்டேன்.. அதையும் மீறி எடுத்து சென்றால், இங்கேயே தீக்குளித்துவிடுவேன்" என்று மிரட்டியிருக்கிறார்.. பாரதியின் இந்த எதிர்ப்பு போலீஸாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.. பிறகு ஒருவழியாக அவரை சமாதானப்படுத்திவிட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினார்கள்.. அப்போது சுரேஷின் கழுத்து, கயிறால் இறுக்கப்பட்டு அதன்பிறகே மூச்சுத் திணறி உயிரிழந்ததாதக ரிப்போர்ட் வந்தது.

இன்வெர்ட்டர் வசதி

இதனால் போலீசார் மீண்டும் சுரேஷின் வீட்டுக்கு சென்றனர்.. அப்போது சுரேஷ் இறந்த தினத்தன்று, வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், இதுகுறித்து பாரதியிடம் போலீசார் கேட்டனர்.. அதற்கு பாரதி, "அந்த நேரத்தில் கரண்ட் போய்விட்டது.. அதனால் கேமராக்கள் இயங்கவில்லை" என்றார்.

உடனே போலீசார், "வீட்டில் இன்வெர்ட்டர் வசதி இருக்கும்போது, சிசிடிவி கேமராக்கள் மட்டும் எப்படி ஆஃப் ஆனது என்று கேட்டனர். அதற்கு பாரதி, "நான் ஏற்கனவே இன்வெர்ட்டரையும் ஆஃப் செய்து விட்டேன்" என்றார்.

இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.. இதற்கு பிறகுதான் பாரதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.. இறுதியில் வேறு வழியின்றி உண்மையை சொன்னார் பாரதி..

பகீர் வாக்குமூலம்

"என் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.. குடிபோதையில் இரவு நேரத்தில் செல்போனில் பாலியல் வீடியோக்களை காட்டி துன்புறுத்தி வந்தார். என் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்தும் கொடுமைப்படுத்தினார். இதனால் எனது 14 வயது மகனும் மனதளவில் பாதிக்கப்பட்டான். அதனால் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்தவரை, நானும், மகனும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்" என்றார். இந்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் பாரதியையும், அவரது 14 வயது மகனையும் கைது செய்தனர்.

சுரேஷ் யார் தெரியுமா

சுரேஷ் ரியல் எஸ்டேட் செய்து வந்தவர்.. இவருக்கு மணிகண்டன் என்ற இன்னொரு பெயரும் உள்ளது.. போலீசாரின் பிரபல ரவுடிகள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பிடித்திருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு \தேரூர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சுரேஷ் முக்கியக் குற்றவாளியாவார்.. இதுதவிர, இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+