ஓமனில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே குறக்குடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஓமன் நாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து உடலை சொந்த ஊருக்கு விரைந்து அனுப்பி வைக்க உறவினர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் அருகே குறக்குடி பகுதியை சேர்ந்த ரெங்கபாய் மகன் பாபு. ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் நான்கு ஆண்டுகளாக ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இந் நிலையில் கடந்த வாரத்தில் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து தாயிடம் தான் ஒரு மாதத்தில் வீட்டிற்கு வர உள்ளதாகவும் சம்பள பணத்திற்காக காத்திருப்பதாகவும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மற்றொரு நபரான அருள் என்பவர் பாபுவின் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது மகனை அடித்து கொலை செய்து பாழடைந்த வீட்டில் சடலத்தை தொங்கவிட்டுள்ளனர் என்றும் போலீசார் உடலை மீட்டு சலாலா மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சோகத்தில் காணப்படும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்து உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications