கேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா?
விஷு பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் காய் கறி கனிகள் படைத்தது கணிகாணும் நிகழ்சிகளும் நடைபெற்றது.
Recommended Video
கன்னியாகுமரி: கேரளாவில் இன்று விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் காய் கறி கனிகள் படைத்தது கணிகாணும் நிகழ்சிகளும் நடைபெற்றது.
சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரளா பாரம்பரிய முறை படி தினசரி பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம். இன்று அதனால் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் மலையாள மொழி பேசும் மக்கள் உட்பட ஏராளமானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் பெற்றனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கைநீட்டமும் வழங்கபட்டது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் சுசிந்தரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோவிலில் பண்டைய மன்னர்கள் காலத்தில் நடத்தபட்டு வந்தது போலவே இன்றும் பூஜைகளும் விழாக்களும் நடத்தபட்டு வருகின்றன. தமிழக இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருந்து வரும் இக்கோவிலில் இன்றும் கேரளா பாரம்பரிய முறைப்படி தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்று கேரளாவில் இன்று விஷு பண்டிகை கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு கேரளா பாரம்பரிய முறை படி சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் கணிகாணும் நிகழ்சிகளும் நடைபெற்றது. இதில் மலையாள மொழி பேசும் மக்கள் உட்பட ஏராளமானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் பெற்றனர்.

கோவிலில் பூஜைகளில் படைக்கபட்டு இருந்த விதம் விதமான காய் கறி கனிகள் கணிகாணும் நிகழ்சியை பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர். இதனால் இந்த ஆண்டு முழுவதும் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கைநீட்டமும் வழங்கபட்டது.












Click it and Unblock the Notifications