பயங்கரம்.. சாலையை கிராஸ் செய்த பெண்.. வேகமாக வந்து மோதிய இளைஞர்.. இருவரும் படுகாயம்!
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பருத்திவிளை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள மேலமணக்குடி பகுதியை சேர்ந்தவர் மேரி ஜெனிபர்(31). தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய இவர் பருத்திவிளை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது எதிரே இருசக்கரவாகனம் வருவதை கண்டு பயந்து போய் தனது இரு சக்கர வாகனத்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி உள்ளார். அப்போது எதிரே நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியை சேர்ந்த டென்னில் என்பவரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேரி ஜெனிபரின் இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மேரி ஜெனிபர் சம்பவ இடத்திலே தூக்கி வீசப்பட்டார். படு காயத்துடன் சுயநினைவின்றி கிடந்த மேரி ஜெனிபரை மீட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேரி ஜெனிபரை மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் டென்னில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications