2 டிரைவர்களுமே தூங்கி.. நேருக்கு நேர் மோதி.. ஒரே பைக்கில் போன 3 பேரும்.. ஸ்பாட்டிலேயே பரிதாப மரணம்
லாரிகள் மோதியதில் 2 டிரைவர்களுமே பலியானார்கள்
கன்னியாகுமரி: ஒரே பைக்கில் 3 பேர்.. அதுவும் தண்ணி அடித்துவிட்டு பைக் ஓட்டியதில், லாரியில் மோதி 3 பேருமே இறந்துவிட்டனர்.. அதேபோல வேறு ஒரு இடத்தில் 2 லாரி டிரைவர்களும் தூங்கி வழிந்து கொண்டே வந்துள்ளனர்.. இவர்களின் அஜாக்கிரதையால் 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி அந்த 2 டிரைவர்களுமே இறந்துவிட்டனர்.. ஆக மொத்தம் இன்று புத்தாண்டில் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்!
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பட பச்சை பகுதியில். தனியார் மதுபான பார் ஒன்று இயங்கி வருகிறது.. மதுவிற்பனை கூடாது என்று சொல்லியும், இந்த பாரில் விடிகாலை முதலே வியாபாரம் படுமும்முரமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நியூ இயர் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் 3 பேர் இங்கு தண்ணி அடித்துள்ளனர்.. பிறகு ஒரே பைக்கில் 3 பேரும் போதையில் வந்துள்ளனர்.. அந்த நேரம் பார்த்து எதிரே வந்த லாரி ஒன்று பைக்கில் பயங்கரமாக மோதியது... இதில் பைக்கில் வந்த மகேஷ், விஜயன், பால்ராஜ் 3 பேருமே தூக்கி வீசப்பட்டு.. துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி லாரி டிரைவரை எஸ்கேப் ஆகிவிட்டார்.. அதனால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.. ஒரே பைக்கில் 3 பேர்.. அதுவும் போதையில் சென்றுள்ளதே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்டமாக போலீசார் தெரிவித்துள்ளனர்..
இதே போல், ஒட்டன் சத்திரம் தங்கச்சியம்மாப்பட்டி அருகே 4 வழிச்சாலை பணி நடந்து வருகிறது.. இங்கு கன்னியாகுமரியில் ஐஸ்கீரிம் லோடு இறக்கிவிட்டு கோயம்புத்தூருக்கு ஒரு லாரி சென்றுள்ளது.. அதேபோல, கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு லாரி வந்துள்ளது.. 2 லாரி டிரைவர்களும் தூங்கி வழிந்திருக்கிறார்கள்.
இவர்களின் கவனக்குறைவால், நேருக்கு நேர் மோதியதில், 2 லாரியுமே அப்பளம் போல் நொறுங்கிவிட்டது.. அத்துடன் 2 டிரைவர்களுமே சம்பவ இடத்தில் உயிரிழந்துவிட்டனர்... புது வருஷம் அதுவுமா 5 பேர் சாலை விபத்தில் அநியாயமாக உயிரிழந்துள்ளது பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications