மகாசிவராத்திரி: கன்னியாகுமரியில் 'சிவாலய ஓட்டம்'.. கோவிந்தா.. கோபாலா..கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
கன்னியாகுமரி: இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பலரும் சிவாலயங்களுக்கு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் 12 சிவாலயங்களில் சிவனை வழிபடுவதற்காக சிவாலய ஓட்டம் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷம் எழுப்பி சிவனை வழிபட்டு வருகின்றனர்
ஆண்டுதோறும் சிவன் கோவில்களில் சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி வட மாநிலங்களிலும் சிவன் கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பலரும் சிவாலயங்களுக்கு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் 12 சிவாலயங்களில் சிவனை வழிபடுவதற்காக சிவாலய ஓட்டம் சிறப்பு வாய்ந்தது.

"மகாசிவராத்திரி"
மகாசிவராத்திரியானது மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த மகாசிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் எந்த தீங்கும் நேராது என்பது சிவ பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்து சிவ பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபட தொடங்கியுள்ளனர். இன்று காலையில் இருந்து அடுத்த நாள் காலை வரை விரதம் இருந்து சிவனை வழிபடுவர்.

விரதம் இருந்து வழிபாடு
சிவ பக்தர்களின் விரதத்தின் முக்கிய நோக்கமாக முக்தி இருக்கிறது. எனவே அடிப்படையான விஷயங்களான உணவு மற்றும் உறக்கத்தை துறந்து சிவனிடத்தில் சேர்வதுதான் மகா சிவராத்திரியின் வழிபாடாக கருதுகின்றனர். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனை வழிபடுவர். இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவர். சிலர் வீட்டில் இருந்தபடியே சிவன் படங்களுக்கு பூஜை செய்வர்.

தொடங்கியது சிவாலய ஓட்டம்
அந்த வகையில் சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் சிறப்பு வாய்ந்தது. இதனால் சிவராத்திரியையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவராத்திரியையொட்டி நேற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டம் நடந்தது. சிவ பக்தர்கள் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற சிவ பக்தர்கள் காவி துண்டும் காவி வேஷ்டி அணிந்திருந்தனர்.

கோவிந்தா கோஷத்துடன்
இதேபோல் சிவ பக்தர்கள் கையில் பனை ஓலை மற்றும் விசிறி விபூதி பொட்டலத்தையும் வைத்துக்கொண்டு ஓட தொடங்கினார்கள். இதற்காக நேற்று காலையிலேயே பக்தர்கள் சிவன் கோவிலுக்கு செல்ல தொடங்கினர். பக்தர்கள் கோவிந்தா.. என்ற கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் நேற்று இரவு கோவில்களில் தங்கி இருந்து சிவனை வழிபட்டனர். தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

12 சிவாலயங்களிலும் பூஜை
இதன் காரணமாக அங்குள்ள 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்று சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றி கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

விடிய விடிய விழித்திருந்து வழிபாடு
இந்த சிவாலய ஓட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். சுமார் 110 கி.மீ. தூரத்தை நடைபயணமாக சென்றும்.. சில பக்தர்கள் ஒடி ச்சென்றும் சிவனை தரிசனம் செய்தனர். இதற்காக வழி நெடுகிலும் பக்தர்களுக்காக உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மகாசிவராத்திரியையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பக்தர்கள் இந்த சிவாலயங்களில் தங்கி விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபடுவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications