கையில் காஸ்ட்லி கேமரா.. பார்வையில் வெறித்தனம்.. அதிர்ந்து போன நர்ஸ்கள்.. விரட்டி பிடித்து தர்ம அடி!
நர்ஸ்கள் துணி மாற்றுவதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி: காஸ்ட்லியான கேமரா லென்ஸ்.. இதை வைத்துதான்.. நர்ஸ்கள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்து கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.. இதை நர்ஸ்கள் பார்த்துவிடவும், தப்பி ஓட முயன்ற அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து கொடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது.. இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார்

அங்கே நர்ஸ்கள் உடை மாற்றும் அறையில் மறைந்திருந்து, அவர்கள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இப்படி வீடியா எடுத்ததையும் அங்கிருந்த நர்ஸ்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே கத்தி கூச்சலிடவும், அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்து சரமாரியாக வெளுத்தனர்.
பிறகு ஆசாரிப்பள்ள்ளம் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.. விரைந்து வந்த போலீஸார், இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் பிரவீன், வயது 30 என தெரியவந்தது.. மந்தாரம்புதூரை சேர்ந்தவர்.. கையில் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருந்தார்.. அதனுடன் ஸ்மார்ட் போனில் பொருத்தும் கேமரா லென்ஸையும் மறைத்து வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த லென்ஸ் ரொம்ப காஸ்ட்லி என்கிறார்கள்.. செல்போன் கேமராவில் பொருத்தினால், தூரத்தில் உள்ள காட்சிகளைக்கூட மிக தெளிவாக படம் பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது. அவருடைய நண்பர் ஒருவர் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளாராம்.. அவரை பார்க்கதான் இங்கு வந்தாராம்..
ஆனால் உண்மை காரணம் அது இல்லை. பிரவீனின் மனைவி இங்குதான் உதவி நர்ஸ்-ஆக வேலை பார்க்கிறார்.. தினமும் டூவீலரில் அவர்தான் மனைவியை கொண்டு வந்து விடுவார்.. வேலை முடிந்ததும் கூட்டிச் செல்வார்.. அப்படி வரும்போதுதான், நர்ஸ்கள் டிரஸ் மாற்றும் ரூம் பற்றி தெரிந்து இப்படி ஒரு காரியத்தில் இறங்கியதாக தெரிகிறது. இது சம்பந்தமாக பிரவீன் மீது புகார் தரப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications