தமிழ்நாட்டில் 234 தொகுதியா.. அந்த கவலை திமுகவிற்கு எதற்கு? மொத்தமே 4 தான்.. உதயநிதி போட்ட ஸ்கெட்ச்
கன்னியாகுமரி: 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் பிரம்மாண்ட இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர் அன்பில் மகேஷின் முழுமையான முன்னெடுப்பில் இந்த இரண்டு சக்கர வாகன பிரச்சார பேரணியை திமுக ரைடர்ஸ் குழு நடத்தவுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால் 234 தொகுதிகளை வள்ளுவர் மண்டலம், பெரியார் மண்டலம், அண்ணா மண்டலம், கலைஞர் மண்டலம், என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பது தான்.

வள்ளுவர் மண்டலத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் என 10 மாவட்டங்கள் 54 தொகுதிகள் வருகின்றன.
பெரியார் மண்டலத்தில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,என 9 மாவட்டங்கள் 54 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. அதேபோல் அண்ணா மண்டலத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, என 8 மாவட்டங்கள் 44 தொகுதிகள் வருகின்றன.
கலைஞர் மண்டலத்தை பொறுத்தவரை புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,என 10 மாவட்டங்கள் 50 தொகுதிகள் வருகின்றன. இந்த இருசக்கர வாகன பிரச்சார பயணத்தின் மூலம் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்திக்கும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்திற்கு நடுவே முக்கிய ஊர்களில் தெருமுனை பிரச்சார கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களில், சூர்யா சேவியர், நடிகர் போஸ் வெங்கட், கருணா, ராஜீவ்காந்தி, ராஜா தமிழ்மாறன், அமுதரசன், மதிவதனி, பத்ம பிரியா, மருத்துவர் யாழினி, பொள்ளாச்சி சித்தீக், ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளனர்.
திமுக ரைடர்ஸ் பிரச்சார குழுவின் இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு மூன்று வேளையும் அறு சுவை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி ஷர்ட், வாகன கொடிக்கம்பம், டிராவல் பேக், முதலுதவி சிகிச்சை மெடிக்கல் கிட், சோப்பு, சீப்பு, பேஸ்ட் கிட், குடிநீர் என எல்லாவிதமன அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்துக் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications