Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 நொடியில் 28 லட்சம்.. நாகர்கோவில் மளிகை கடை வியாபாரிக்கு விபூதி அடித்த கார் டிரைவர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த மளிகை வியாபாரியிடம் திருடிய ரூ.28 லட்சம் பணத்துடன் கார் டிரைவர் கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 72 வயதாகும் ஆறுமுகம் பிள்ளை என்பவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்களை மொத்த வியாபாரம் செய்யும் கடை வைத்திருக்கிறார். கோட்டார் மார்க்கெட்டில் ஆறுமுகம் பிள்ளைக்கு குடோன் உள்ளது. ஆறுமுகம் பிள்ளையிடம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதாகும் கதிரவன் கடந்த 2 ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

Nagercoil Car driver flees to Kerala with Rs 28 lakh stolen from grocer

ஆறுமுகம் பிள்ளை சரக்கு கொள்முதல் செய்வதற்காக வங்கியில் திங்கட்கிழமைதோறும் பணம் டெபாசிட் செய்து வந்துள்ளார். அண்மையில் இவருக்கு வேறு பணிகள் இருந்ததால் தனது கடை ஊழியர் ராமதாஸிடம் ரூ.28 லட்சம் பணத்தை கொடுத்து வங்கியில் செலுத்துமாறு கூறியிருக்கிறார்.

இதையடுத்து ராமதாஸ், கார் டிரைவர் கதிரவனை அழைத்துக்கொண்டு காரில் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்றுள்ளார். அங்கு ராமதாஸ் பணத்தை காரில் வைத்துவிட்டு, வங்கிக்குள் சில நொடிகள் சென்றுவிட்டு வெளியே வந்தபோது கார் மாயமாகியது. காருடன் டிரைவர் கதிரவனும் மாயமாகி இருந்தார்.

கதிரவனை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. ராமதாஸ் இதுகுறித்து ஆறுமுகம் பிள்ளையிடம் தகவல் கொடுத்தார்.. உடனே ஆறுமுகம் பிள்ளையும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து கார் டிரைவர் கதிரவனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கார் ராமன்புதூர் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்தது. உடனே ஆறுமுகம் பிள்ளை அங்கு சென்று காரை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார்

ஆறுமுகம் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யசோபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கார் நின்ற பகுதிக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் நின்ற இடத்தில் கதிரவனின் செல்போன் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கதிரவன் காரை நிறுத்திவிட்டு ரூ.28 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி செல்வது போன்ற காட்சி பதிவாகியது.

அந்த ஆட்டோவின் பதிவு எண் மூலம் ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கதிரவன் அந்த ஆட்டோவில் தக்கலை வரை சென்றதும், அங்கிருந்து மற்றொரு ஆட்டோவில் திருவனந்தபுரம் சாலை நோக்கி சென்றதாகவும் தெரிவித்தார். இதன்படி பார்க்கையில், கார் டிரைவர் கதிரவன் கேரள மாநிலம் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். கதிரவன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+