தொடர்ந்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து கொரோனா காரணமாக அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் திமுக எம்எல்ஏக்கள் வரிசையாக பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுதான் கன்னியாகுமரி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது..

Nagercoil DMK MLA Suresh Rajan gets positive for Coronavirus

இந்த நிலையில் இன்று நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

முன்னதாக தமிழ்கத்தில் வரிசையாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலருக்கு கொரோனா ஏற்பட்டது. முன்னதாக திமுக எம்எல்ஏ கார்த்திகேயன். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏ நிலோபர் ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டது.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+