பிரணவ் ஜூவல்லரியில் எல்லாமே போலி நகை.. மிஸ்ஸான லாக்கரை மீண்டும் திறந்து பார்த்து.. அதிர்ந்த போலீஸ்
நாகர்கோவில்: 'சீல்' வைக்கப்பட்ட நாகர்கோவில் பிரணவ் ஜூவல்லரி நகை கடையில் லாக்கர் சாவியை வாங்கி மீண்டும் போலீசார் சோதனை நடத்தி உள்ளார்கள். ஆனால் லாக்கரிலும் எதுவுமே இல்லை.. அங்குள்ள பொருட்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி என்ற பிரபல நகைக்கடைகள் இயங்கி வந்தது. திருச்சியில் மட்டுமின்றி நாகர்கோவில், மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை உள்பட 11 இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்த கடையில் நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மற்ற கடைகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சிகரமான சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டடன.

இந்த விளம்பரங்களில் மிகவும் பிரபலமான நடிகர்களும் நடித்தனர். இதனால் மக்கள் மிகப்பெரிய நிறுவனம் என்று நம்பி ஆயிரக்கணக்கானோர் சிறு சேமிப்பில் சேர்ந்தனர். இது ஒருபுறம் எனில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையில் முதலீடு செய்தால் , அந்த முதலீட்டு தொகைக்கு 9 சதவீதம் வரை போனஸ் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி திருச்சி,மதுரை, கோவை, நாகர்கோவில் பகுதியில் ஏராளமான மக்கள் இந்த நகைக்கடையில் முதலீடு செய்தனர்.
ஆனால் பிரணவ் ஜூவல்லரி முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு முடிந்த உடன் அந்த நகைக்கடைக்கு சென்ற முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல் இழுத்தடித்து மோசடி செய்தனர். வாடிக்கையாளர்கள் செலுத்திய பல கோடி ரூபாய் பணம் மொத்தமாக மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த மோசடி விவகாரம் வெளியான உடனேயே அனைத்து கடைகளும் மூடப்பபட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மதுரை, திருச்சி, சென்னை, நாகர்கோவில் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் உள்ள பிரணவ் நகை கடையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு தங்கம், வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
இதனிடையே நாகர்கோவிலில் இயங்கி வந்த பிரணவ் நகை கடையிலும் குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரச்சனை ஏற்பட்டபோதே சோதனை செய்தனர். ஆனால் சோதனை நடத்திய போது அங்கு தங்க நகைகளே இல்லை. அக்டோபரில் நடந்த சோதனையில் கடையில் 50 செயின்கள் மற்றும் நெக்லஸ்கள், 100 மோதிரங்கள், 100 கம்மல்கள் இருந்தன. ஆனால் இந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலி நகைகளுடன் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மடிக்கணினிகள் மற்றும் ஹார்டு டிஸ்க் மட்டும் தான் இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் பிரணவ் ஜூவல்லரி நகை கடைக்கு சீல் வைத்தனர்.
அதேநேரம் போலீஸ் சோதனை நடத்திய போது நகை கடையில் இருந்த லாக்கரை திறக்க முடியவில்லை. லாக்கர் சாவியை உரிமையாளர் வைத்திருந்ததால் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திருச்சியில் உள்ள பிரணவ் நகை கடையில் நடைபெற்ற சோதனையில் நாகர்கோவிலில் உள்ள கடையின் லாக்கர் சாவியும் கிடைத்தது. இந்த சூழலில் கடையில் இருக்கும் மர நாற்காலிகள், மேஜைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி நேற்று நாகர்கோவிலில் உள்ள பிரணவ் ஜூவல்லரி நகை கடையை திறந்து மீண்டும் போலீஸ் ஆய்வு செய்தனர். பின்னர் லாக்கரை நேற்று போலீசார் திறந்து பார்த்தனர். ஆனால் லாக்கரிலும் எதுவுமே இல்லை. இதனையடுத்து கடையில் இருந்த மர பொருட்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ததும் மீண்டும் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications