ஒரே படுக்கையில்.. "ஜோடி" யார்னு பாருங்க.. அதிகாலையில் ஒரே அக்கப்போரு.. மொத்த பேரும் ஆடிப்போயிட்டாங்க
கன்னியாகுமரி: பொதுவெளியில், ஒரே படுக்கையில் நடந்த அட்டகாசத்தை பார்த்து பொதுமக்கள் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. நேற்று மாலையில், வழக்கம்போல், பெங்களூரில் இருந்து, அந்த எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. வழக்கம்போல், ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணித்தனர்.

நாகர்கோவில்: இன்று அதிகாலை 5.30 மணிக்கு, நெல்லை ரெயில்வே ஸ்டேஷனுக்கு அந்த ரயில் வந்து சேர்ந்தது.. அப்போது ஏராளமான பயணிகள் நாகர்கோவிலுக்கு வருவதற்காக, அந்த ரயிலில் ஏறினார்கள்.
விடிகாலை நேரம் என்பதால், நேற்று சாயங்காலம் ரயிலில் ஏறிய பயணிகள், அசந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.. அப்போது, அந்த ரெயிலின் S-1 பெட்டியில், ஒரு ஜோடி உட்கார்ந்திருந்தது. அந்த பெண்ணுக்கு 25 வயதிருக்கும்.. அவருக்கு பக்கத்திலேயே இளைஞரும் உட்கார்ந்திருந்தார்.. நெல்லை வரை மேலடுக்கு படுக்கையில், அதுவும் ஒரே சீட்டில் இருவருமே உட்கார்ந்திருந்தனர்..
ரயில் பெட்டி: கொஞ்ச நேரத்தில், அந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத இருக்கைக்கு சென்றது. பிறகு, 2 பேரும், ஒரே சீட்டில் உட்கார்ந்து சில்மிஷத்தை ஆரம்பித்துள்ளனர்.. ஒருகட்டத்தில் அந்த ஜோடி எல்லை மீற துவங்கியது. ஓடும் ரயிலிலேயே மாறி மாறி கட்டி அணைப்பது, முத்தமிடுவது என சேட்டைகள் நடந்தன..
இத்தனைக்கும் அந்த பெட்டியில், நிறைய பயணிகள் அங்கேயேதான் இருந்தனர்.. ஆனால், இந்த ஜோடியை யாருமே கண்டுகொள்ளவில்லை..
நேரம் ஆக ஆக, இந்த ஜோடியின் அட்ராசிட்டி அதிகமாகவும், அந்த பெட்டியில் இருந்த பயணகள் ஒவ்வொருவராக முகம் சுளிக்க துவங்கினர்.. அத்துமீறல்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்ததுமே, அதற்கு மேல் பொறுக்க முடியாத பயணிகள், அந்த ஜோடியை எச்சரித்தனர்.. ரயிலில் இப்படியெல்லாம் செய்யலாமா? என்று கோபத்துடன் கேட்டு, கண்டித்தனர்.. சிலர் அந்த ஜோடிக்கு அறிவுரையும் சொன்னார்கள்.
கண்டிப்பு: ஒட்டுமொத்த பேரும் திரண்டு வந்து, கண்டிக்கவும், அந்த ஜோடி மலங்க மலங்க விழித்தது.. பிறகு, தங்கள் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிட்டது. ஆனால், இதெல்லாம் நடந்து முடிவதற்குள் நாகர்கோவில் ரெயில்வே ஸ்டேஷனே வந்துவிட்டது.
ஸ்டேஷனில் வந்து நிற்கும் முன்பேயே, அவசர அவசரமாக, இந்த ஜோடி ரெயிலை விட்டு இறங்கி தலைதெறிக்க ஓடியது.. இவர்கள் 2 பேருமே நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்களாம்.. பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்.. இப்போது வாரவிடுமுறை லீவு என்பதால், ஒன்றாக ஊருக்கு கிளம்பி வந்துள்ளார்கள்.. ஆன்தி வேயில் இப்படியொரு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்..
வலுக்கும் கோரிக்கை: இவர்கள் மட்டுமல்ல, இதுபோல நிறைய ஜோடி, ரயிலில் அத்துமீறுவதாகவும், பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் சொல்கிறார்கள்.. ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
பாலியல் சேட்டைகள் பெரும்பாலும், டெல்லி போன்ற மெட்ரோ ரயில்களில் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மெட்ரோ நிறுவனமும், தொடர்ந்து வார்னிங் தந்து வரும்நிலையில், நம்ம ஊரிலேயே, நம்ம ரயில்களிலேயே, இப்படியான கன்றாவிகள் நடப்பது, பெருத்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications