அடைமழையில் அசிங்கம்.. ஓடும் காரில் நாகர்கோவில் தவெக நிர்வாகி பண்ண காரியம்! உடனே பெண் செய்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காரில் அழைத்துச் சென்ற தவெக நிர்வாகி ஒருவர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது... இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி கொண்டிருக்கிறார்கள்.. அடை மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Nagercoil TVK Leader Case

இவருடன் மூலச்சல் பகுதியை சேர்ந்த இன்னொரு மாணவியும் படித்து வருகிறார்... இந்த மாணவி விலவூர் பகுதியை சேர்ந்தவர்.. குமரி மத்திய மாவட்ட தவெக இளைஞரணியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். இவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்..

கன்னியாகுமரி கிறிஸ்டோபர்

அந்த வகையில், புதன்கிழமை சாயங்காலம், காலேஜ் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக 2 பேரும் கொட்டுமலை பகுதியில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மருதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், மாணவிகள் இருவரிடமும் பேசியுள்ளார். கிறிஸ்டோபர் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருப்பவர்.

நானும் ஊருக்குத்தான் செல்கிறேன். எனது காரில் வாருங்கள். நான் உங்கள் வீடுகளில் விடுகிறேன் என்று கூறி, காரில் ஏற சொல்லி உள்ளார்.. தங்களுக்காக தவெக நிர்வாகி உதவுவதாக சொல்லவும், 2 பெண்களும் காரில் ஏறியிருக்கிறார்கள்.. முதலில் மூலச்சல் பகுதியை சேர்ந்த மாணவியை அவரது பகுதியில் இறக்கிவிட்டுள்ளார்.

அடைமழையில் பாலியல் தொல்லை

அதன்பிறகு குலசேகரம் பகுதியை சேர்ந்த இன்னொரு மாணவியை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பயங்கரமான மழை பெய்துகொண்டிருந்தது..

அந்த நேரத்தில் திடீரென காரை நிறுத்திய கிறிஸ்டோபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டு காரில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். பிறகு கோபத்தில் மாணவி அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து தவெக நிர்வாகி, மாணவியிடம் மன்னிப்பு கேட்டதுடன், சமாதானப்படுத்தியுள்ளார்.. பிறகு அவரை வீட்டின் முன்பு இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாராம்..

கிறிஸ்டோபர் எஸ்கேப்

ஆனால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத மாணவி, நடந்த சம்பவத்தை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக கொற்றிக்கோடு காவல் நிலையத்துக்கு சென்று கிறிஸ்டோபர் மீது புகார் தந்தனர்..

மாணவியின் புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கை தக்கலை காவல் நிலையத்துக்கு மாற்றினர். இதைத்தொடர்ந்து தக்கலை போலீசார் கிறிஸ்டோபர் மீது பாரதிய நியாயச் சட்டத்தின் 75 மற்றும் 76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஆனால் அதற்குள் கிறிஸ்டோபர் தலைமறைவாகி விட்டார்.. இப்போது அவரை பிடிக்க போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..

லேட்டான வழக்கு பதிவு?

கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த மாணவிக்கு உதவுவது போல் அழைத்துச் சென்ற நபர் மீது இத்தகைய புகார் எழுந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தரப்பில் புகார் தந்ததுமே, போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காமல் சமாதனம் செய்து அனுப்பி வைத்ததாக சலசலப்புகள் எழுந்தன.. இதற்கு பிறகே வழக்கு பதிவு செய்து, தேடல் வேட்டை ஆரம்பமாகி உள்ளதாம்.

ராணிப்பேட்டை - அரக்கோணம்

ஏற்கனேவ ராணிப்பேட்டை அரக்கோணத்தில் தவெக நிர்வாகியால், ஒரு பெண் பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.. அதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரத்தையும் தந்துள்ளார்.. ஆனால் நடவடிக்கை இல்லையாம்.

பிறகு கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தந்தார்.. தர்ணா போராட்டமும் நடத்தி விட்டார்.. இதுவரை அந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. இதைதான் திமுகவும் கேள்வி எழுப்பி வருகிறது.. "இது என்ன வெற்றி பாலியல் திட்டமா? எந்த மூஞ்சியை வைத்து கெண்டு பெண்களுக்கு ஒன்று என்றால் வந்து நிற்பேன்" என்று பேசுகிறீர்கள் விஜய்" என்று ஐடி விங் கேள்வியெழுப்பிருந்தது.. இப்போது மீண்டும் ஒரு பாலியல் புகார், கன்னியாகுமரியில் வெடித்து கிளம்பி உள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+