Exclusive: 17 வகை கூட்டுப் பொறியல்! 5 வகை குழம்பு! பொங்கல் பண்டிகையை விவரிக்கும் நாஞ்சில் சம்பத்!
கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகை அன்று தனது வீட்டில் 17 வகையான கூட்டுப் பொறியல்களுடன் 5 வகையான குழம்பு வைத்து விருந்து பரிமாறப்படும் எனக் கூறுகிறார் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அறிவதற்காக நாஞ்சில் சம்பத்திடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம்.
புதுப்பானையில் பொங்கி வரும் பொங்கலை போல் மகிழ்ச்சி ததும்ப தமிழர் திருநாள் கொண்டாட்டம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் பின்வருமாறு;

பொங்கல் பண்டிகை
''நான் கொண்டாடுகின்ற ஒரே பண்டிகை பொங்கல் மட்டும் தான். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கலை கொண்டாடுவதற்காக வீடு வந்து சேர்ந்துவிடுவேன். தீபாவளி உட்பட எந்த பண்டிகைக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பொங்கலுக்கு கொடுப்பேன். காலத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து மகிழ்வேன். உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துச்சொல்லி வாழ்த்துப் பெற்றுக்கொள்வேன்.''

17 வகை கூட்டுப் பொறியல்
''பொங்கல் அன்று எனது வீட்டில் 17 வகையான கூட்டுப்பொறியல்களும் 5 வகையான குழம்புகளும் வைத்து விருந்து பரிமாறப்படும். ரத்த சொந்தங்களுடன் அமர்ந்து அதை சாப்பிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை வேறு எதுவுமே இருக்காது. இஞ்சித்தீயல், மாங்காய்பச்சடி, நார்தங்கா கூட்டு, பூசனி எரிசேரி, சிங்கன் வாழை விழுக்கு பிரட்டு, அவரை பொறியல், அன்னாசிப்பழக்கூட்டு, உருளை கூட்டுக்கறி, கும்பளங்காய் கிச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, விலாங்காய் கூட்டு, கதம்ப பச்சடி, கத்திரிக்காய் வறுவல், நேந்திரங்காய் சிப்ஸ், உப்பேறி என 17 வகையான சைட் டிஷ்களோடு சாதம், பாயாசம், அப்பளம் என இன்னும் சில பண்டங்களும் வீட்டில் தயாரிப்பார்கள்.''

புத்தாடை பரிசு
''வீட்டில் பணியாற்றுபவர்கள், ஆதரவற்றவர்கள் என பலருக்கும் நான் பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்தாலும் எனக்கு ஒரு தம்பி புத்தாடை எடுத்துக்கொடுப்பார். நாகராஜ் என்ற அந்த தம்பி இதை பல வருடமாக வழக்கமாக வைத்திருக்கிறார். அதை என்னால் தட்ட முடியாத அளவுக்கு அன்பு கொண்ட தம்பி அவர். வீட்டில் ஒரு விசேஷம் வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல் எங்கள் வீடு பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.''

தை பிறந்தால்
பொங்கல் அன்று மதியம் வரை வாழ்த்துக் கூறவும் வாழ்த்துப்பெறவுமே எனக்கு நேரம் போதாது, மதியம் விருந்து சாப்பிட்டவுடன் உறங்குவதை வழக்கமாக கொண்டவன். வேறெங்கும் சுற்றும் பழக்கம் எனக்கில்லை. இப்படித்தான் பொங்கல் பண்டிகையை நான் கொண்டாடி வருகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பக்கூடிய தமிழர்களில் நானும் ஒருவன் என்பதால், மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் இந்த பொங்கலை கொண்டாட காத்திருக்கிறேன்.''
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications