6 ம் தேதி சென்னை கூட்டத்தில் மோடி பங்கேற்பாரா ?… முரளிதரராவ் பதில்
குமரி: பிரதமர் மோடி வருகிற 6ம் தேதி சென்னை வருவது இன்னும் உறுதியாகவில்லை என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
பாஜக பொதுச்செயலாளர்களில் ஒருவரான முரளிதர ராவ், மார்ச் 1 ம் தேதி (நாளை) பிரதமர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள விழா மேடையை நேரில் சென்று முரளிதரராவ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆலோசித்து முடிவு
பாஜக தமிழக மக்களிடம் சென்று சேர சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் வரும் 6 ஆம் தேதி சென்னை வருவது உறுதியாகியுள்ளது. ஆனால் இடம் இறுதி ஆகவில்லை கூட்டணி கட்சிகளோடு ஆலோசித்து இடம் உறுதி செய்யப்படும்.

ஸ்டாலின் மீது பாய்ச்சல்
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பாஜக உறுதியாக அனைத்து இடங்களையும் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி கூட அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதுவே முதல் முறை
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் கிடைக்கும். நாளை மோடி நாடு முழுவதும் உள்ள 1 கோடி பூத் கமிட்டி உறுப்பினர்களை அறிவிக்கிறார். உலக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை.

ராகுல் பேரணி எதற்கு?
மார்ச் 2 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 4,120 சட்டமன்ற தொகுதிகளிலும் இரு சக்கர வாகன பிரச்சார பேரணிகள் நடைபெற உள்ளது. கருணாநிதி மறைவிற்கு பிறகு தலைவர் இல்லா கட்சியாக திமுக உள்ளது. அதனால் தான் ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் பயன்படுத்துகிறார்.

ஜெயலலிதாவின் புகழ்
ஜெயலலிதாவின் புகழும், மோடி அவர்களின் உறுதியான முடிவெடுக்கும் தன்மையும் இணைத்ததால் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெருவோம் என அவர் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications