நெற்றியில் திருநீறு பட்டை.. கண் மூடி உருகி தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி! வெளியானது வீடியோ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை முதல் தியானம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி தியானம் செய்யும் வீடியோ காட்சி, புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி நேற்று மாலை முதல் தியானம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர் தியானம் செய்யும் படங்கள் இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் முதல் முறையாக அவர் தியானம் செய்யும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறைக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தொடங்கி 45 மணி நேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் வரை தொடர் தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

இன்று காலையில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்தார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி காவி உடை அணிந்திருந்தார். கையில் ருத்திராட்ச மாலை வைத்திருந்தார். சூரிய உதயத்தின்போது, கமண்டலத்தில் இருந்து நீர்வார்த்து வணங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
சூரிய உதயத்தை குமரி முனையில் தரிசித்த பிரதமர் மோடி, அதன்பிறகு மீண்டும் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்து வருகிறார். இன்று இரண்டாவது நாளாக தியானத்தை தொடர்ந்து வருகிறார் பிரதமர் மோடி. தியானத்திற்கு இடையே, இளநீர், பழச்சாறு அருந்தி வருகிறார் பிரதமர் மோடி.
#WATCH | Kanniyakumari, Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June pic.twitter.com/X4bvAdgZLs
— ANI (@ANI) May 31, 2024

விவேகானந்தர் சிலைக்கு முன்பாக காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நெற்றியில் விபூதி பட்டை - குங்குமம் அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை வைத்தபடி கைகூப்பி வணங்கியவாறு பிரதமர் மோடி சம்மனம் இட்டு அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications