காப்பு காட்டில் பிணவாடை.. இறந்து 2 நாளாச்சே.. பதறிய குடும்பத்தார்.. ஏன் இப்படி செய்தார் கிருஷ்ணமணி
கன்னியாகுமரி போலீஸ்காரர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
கன்னியாகுமரி: "விஷம் குடித்துள்ளார்.. இறந்து 2 நாளாச்சு" என்ற தகவலை கேட்டு குடும்பத்தினர் கதறிவிட்டனர்.. போலீஸ்காரர் ஒருவரின் தற்கொலை காப்புக் காட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மணி.. இவருக்கு 38 வயதாகிறது.. நாகர்கோவிலில் போலீஸாக வேலை பார்த்து வந்தார். கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கிருஷ்ணமணிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் 5 நாள் வேலைக்கு லீவு போட்டிருந்தார்.. 2 நாளைக்கு முன்பு மனைவி பிள்ளைகளை ஸ்கூலில் இருந்து அழைத்து செல்ல சென்றிருந்தார்.. திரும்பி வந்து பார்த்தால் கிருஷ்ணமணி வீட்டில் இல்லை... அதனால் அவர் எங்கிருக்கிறார் என்று கேட்க போன் செய்தால், செல்போன் வீட்டிலேயே இருந்தது.. பைக்கும் வெளியே நின்றிருந்தது.. அப்படியானால் அவர் எங்கே போயிருப்பார் என்று தெரியாமல் குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். இறுதியில் புதுக்கடை ஸ்டேஷனில் புகார் தரவும், போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.
இந்த சமயத்தில்தான் கிருஷ்ண மணி வீட்டு தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.. அதனால் அங்கு சென்று பார்த்தால், கிருஷ்ண மணி சடலமாக கிடந்தார்.. உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. அப்போது கிருஷ்ணமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவர் இறந்து 2 நாள் ஆகிவிட்டது என்றும் தெரியவந்தது.
ஆனால் எதனால் கிருஷ்ண மணி இறந்தார் என்று உறுதியாக தெரியவில்லை.. உடம்பு சரியில்லை என்று ஒருமாதம் லீவு கேட்டுள்ளார்.. ஆனால் 5 நாள்தான் தந்தார்களாம்.. ரொம்ப நேரமாக நின்னு வேலை பார்க்க முடியல என்று குடும்பத்தாரிடம் கிருஷ்ணமணி வருத்தப்பட்டு சொல்லி வந்தாராம்.. மன உளைச்சலிலும் இருந்தார் என்கிறார்கள் குடும்பத்தினர். ஆனாலும் உண்மை தன்மை தெரியவில்லை.. ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கான காரணம் குறித்து புதுக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications