கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் ஒரு மேட்டரா? டி சர்ட்-ஐ தூக்கி காட்டிய ராகுல் காந்தி - நேத்து பாஜக சொன்னாங்களே!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டீ சர்ட் விலை ரூ.41,257 என்று நேற்று பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இன்று ராகுல் காந்தி டீசர்டை தூக்கிக் காட்டிய படம் அதிகளவில் வைரலாகி வருகிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். இன்று காலை அங்கிருந்து நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி, கேரள மாநிலம் பரசலா பகுதிக்கு செல்கிறார்.

 "அண்ணாந்து" பார்க்கும் பாஜக.. ராகுல் காந்திக்கு எகிறும் மவுசு.. இன்று 4வது நாள் நடைபயணம் துவக்கம்

பயண விபரம்

பயண விபரம்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

150 நாட்கள்

150 நாட்கள்

380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

டி சர்ட் சர்ச்சை

டி சர்ட் சர்ச்சை

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட் டி சர்ட் விலை ரூ.41,257 என புகைப்படத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி, "ஆடை குறித்து பேச வேண்டும் எனில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கூலிங் கிளாஸ் பற்றி பேச வேண்டும்." என்று கூறியது. இந்த நிலையில் இன்று நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, சிராயன் குழி பகுதியில் டி சர்டை தூக்கிக் காட்டினார். வேலம்மாள் பாட்டியை படம்பிடித்த ஜாக்சன் ஹெர்பி எடுத்த இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

English summary
Rahul Gandhi highlighted his T Shirt today after BJP's comment: ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டீ சர்ட் விலை ரூ.41,257 என்று நேற்று பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இன்று ராகுல் காந்தி டீசர்டை தூக்கிக் காட்டிய படம் அதிகளவில் வைரலாகி வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X