நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. சமயம் பார்த்து ராகுல் காந்தி சந்தித்த நபரை பாருங்க.. என்ன பேசினார்?
கன்னியாகுமரி: ஒற்றுமைப் பயணத்தின் போது நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சகோதரரை ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமைக்கான பயணம் ' என்ற பாத யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிமீ தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.
இதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் 120 பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதனை கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 600 மீட்டர் வரை நடைபயணம் சென்ற ராகுல் காந்தி, முதல் நாள் யாத்திரையை முடித்துக் கொண்டார்.

2ம் நாள் பயணம்
இந்த நிலையில் ஒற்றுமைப் பயண யாத்திரையின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடங்கினார். இந்த பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்ய உள்ளனர்.

மக்களை சந்திக்கும் ராகுல்
அகஸ்தீஸ்வரத்தில் இன்று இரண்டாவது நாள் பயணம் மேற்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ராகுல் காந்தி 1 லட்சம் பொதுமக்களை சந்திக்கிறார். இன்று காலை யாத்திரை தொடங்கியது முதலே பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார். அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட தமிழக காங்கிரஸை சேர்ந்த நிர்வாகிகள் மொழிபெயர்த்து வருகின்றனர்.

அனிதா குடும்பத்தை சந்தித்த ராகுல்
இந்த நிலையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூரி மாணவி அனிதாவின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். அவரது சகோதரரை சந்தித்த ராகுல் காந்தி, அவருடன் சில நிமிடங்களில் நடந்துகொண்டே பேசினார். அவரின் பேசியதை காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு மொழிபெயர்த்து கூறினர்.

ராகுல் சந்திப்பால் விவாதம்
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் சூழலில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சகோதரரை ராகுல் காந்தி சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. ராகுல் காந்தி ஏற்கனவே பல்வேறு தருணங்களில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications