Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலுடன் போன புதுவை மாஜி முதல்வர் நாராயணசாமி..நடுவில் சந்தித்த கூடங்குளம் உதயகுமார்- நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கூடங்குளம் அணு உலை போராட்டம் நடந்த போது அந்த போராட்டத்தை சுப. உதயகுமார் வெளிநாட்டு பணம் பெற்று நடத்துவதாக இடைவிடாத குற்றம்சாட்டியவர் மத்திய அமைச்சராக இருந்த புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி. இப்போது புதுவை நாராயணசாமியை முன்வைத்து கூடங்குளம் வெளிநாட்டு பணம் விவகாரம் குறித்து பஞ்சாயத்து மீண்டும் கிளம்பி இருக்கிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளா ராகுல் காந்தி. ராகுல் காந்தியை கூடங்குளம் சுப. உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பை நியாயப்படுத்தியும் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

Rahul Yatra: Koodankulam Udayakumar meets Puducherry Ex CM Narayanasamy

இந்த நிலையில் ராகுலுடன் நடைபயனம் சென்ற புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியை, கூடங்குளம் போராட்டக்குழு சுப.உதயகுமார் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த உதயகுமார் மீதுதான், வெளிநாட்டு பணம் பெற்றுக் கொண்டு இந்தியாவில் போராட்டம் நடத்துகிறார் என இடைவிடாமல் புகார் கூறியவர் நாராயணசாமி. என்னை, எனது குடும்பத்தை, என்னோடு போராட்டக்களத்தில் நின்ற தோழர்களை, மக்களை அத்தனை பேரையும் வெளிநாட்டுப் பணம் பெறுபவர்கள், அந்நிய நாட்டுக் கைக்கூலிகள், தேசத் துரோகிகள் என்றெல்லாம் பலமுறை நாகூசாமல் பேசி அவதூறு பரப்பியவர் திரு. நாராயணசாமி அவர்கள். என்னுடைய ஊர்க்காரர்கள், உறவினர்கள் என எல்லோருமே நான் வெளிநாட்டுப் பணத்துக்காக மட்டுமே போராட்டம் நடத்தினேன் என்று உறுதியாக நம்பினார்கள், பேசினார்கள். பணத்தாசையால் கணவனை கடலோர ஊர் ஒன்றுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருக்கிறாள் என்று என் மனைவி காதுபடவே பலர் அவரைத் திட்டினார்கள். சில முட்டாள் பள்ளி ஆசிரியர்கள் என் குழந்தைகளை பிற மாணவர்கள் முன்னால் நிற்கவைத்து "உங்கள் அப்பாவுக்கு வெளிநாட்டுப் பணம் நிறைய வருகிறதாமே"" என்று கேள்வி கேட்டு கேவலப்படுத்தினார்கள். என் மனைவியும், குழந்தைகளும் போனில் இவற்றைச் சொல்லி அழுத நாட்கள் பலவுண்டு. இன்றளவும் வெளிநாட்டுப் பணம் பெற்றவன் என்கிற கருத்து பலர் மத்தியில் இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் மேற்படி திரு. நாராயணசாமியும், திரு. மன்மோகன் சிங்கும், சில காங்கிரசு கட்சித் தலைவர்களும்தான். பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று பொய் சொன்னபோது, அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. மு. இராதாகிருஷ்ணன் அவர்கள் வழியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதன் பிறகு அவர் வெளிநாட்டுப் பணம் பற்றி வாய்திறக்கவே இல்லை. ஆனால் நம் ஐயா தொடர்ந்து கத்திக் கொண்டேயிருந்தார். திரு. நாராயணசாமி அவர்கள் புதுச்சேரி முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மோடி அரசு அறிவித்தது. பொங்கியெழுந்த அவர் இந்திய இராணுவமே வந்தாலும் அதை அனுமதிக்க மாட்டேன் என்று கூவினார். உடனடியாக நானும், பேராசிரியர் த. ஜெயராமன் அவர்களும், அவரது துணைவியாரும், 'பூவுலகின் நண்பர்கள்' கோ. சுந்தர்ராஜன் அவர்களும் திரு. நாராயணசாமி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பாராட்டினோம். "இப்போது புரிகிறதா எங்கள் நிலைப்பாடு?" என்று கேட்டோம். அவரோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டோம்.

கடந்த செப். 8, 2022 அன்று இந்திய ஒற்றுமை பயணத்தில் எல்லோரும் நடந்தபோது, என்னுடைய வீட்டருகே இடலாக்குடிப் பகுதியில் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். உடனடியாக படம் எடுத்துக் கொள்வோம் என்றேன் என்னுடைய நண்பர்களிடம்.
உங்களை 'வெளிநாட்டுப் பணவெறியன்' என்றழைத்தவர், உங்கள் மீது அபாண்டமாக பழிகள் சொன்னவர், அவதூறுகள் பரப்பியவர் உங்களோடு நின்று படமெடுத்துக் கொள்கிறார் என்றால், தான் சொன்னதெல்லாம் தவறு, பொய் என்று ஒத்துக்கொள்கிறார் என்றுதானே அர்த்தம்? அதுவும் என் பகுதி மக்கள் கண்களின் முன்னால், நெடுஞ்சாலையில், பொதுவெளியில் இது நடக்கிறது என்றால், அதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?

அன்று நாராயணசாமிக்கு கடும் வசை.. இன்று பாராட்டிப் புகழாரம்.. உதயக்குமார் பேச்சால் கலகல
ஆக, ஒருமுறை அவருடைய முதல்வர் அலுவலகத்திலும், இன்னொருமுறை என் வீட்டருகிலும் திரு. வே. நாராயனசாமி அவர்களுடன் புகைப்படம் எடுத்து நான் குற்றமற்றவன், அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை என்று நிரூபித்துவிட்டேன். நன்றி! இவ்வாறு உதயகுமார் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+