சசிகலா கொரோனாவிலிருந்து மீள நான் பிரார்த்தனை செய்வேன்.. எஸ் ஏ சந்திரசேகர்
கன்னியாகுமரி: சசிகலா அம்மையார் நோய் தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்காக நான் பிரார்த்தனை செய்வேன் என திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அழகப்பபுரம் அருகே திருமூலநகர் மலை குகை மாதா புனித தோமையார் தேவாலயம் திறப்பு விழா நடைபெற்றது.
கலப்பை மக்கள் இயக்க தலைவர் திரைப்பட இயக்குனர் பி.டி. செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற தேவாலய திறப்பு விழாவில், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் கலந்து கொண்டு புதிய தேவாலயத்தை திறந்து வைத்தார்.

ஊர் நல்லாயிருக்கும்
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம். நான் நல்லவராக இருந்தால் தான் என் வீடு நல்லாயிருக்கும். அதுபோலதான் தலைவர் நல்லவராக இருந்தால்தான், ஊர் நல்லாயிருக்கும்.

தமிழர்களுக்கு நன்மை
இது போலதான் நாடும். தமிழர்களுக்கு நல்லதை செய்பவர்கள்தான் ஆட்சியில் வரவேண்டும். சசிகலா அம்மையார் நோய் தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்காக நான் பிரார்த்தனை செய்வேன் என்றார் எஸ் ஏ சந்திரசேகரன்.

கட்சி பதிவு
விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரன், அண்மையில் ஒரு கட்சியை பதிவு செய்தார். அதில் விஜயின் பெயரை பயன்படுத்தி பின்னர் அவரது எதிர்ப்பால் அந்த பெயர் பதிவை ரத்து செய்தார். இதையடுத்து அவரது அமைப்பிலிருந்து சிலர் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

யாரும் இணையாதீர்
இந்த நிலையில் கடந்த மாதம் தனது பண்ணை வீட்டில் மக்கள் இயக்கத்தினரை காணொலி காட்சி மூலம் விஜய் சந்தித்தார் என தகவல்கள் கூறின. மேலும் தான் நிச்சயம் ஒரு நல்ல முடிவை எடுப்பேன் என்றும், யாரும் வேறு கட்சியில் இணைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications