விஜயதாரணியின் சாதனையை முறியடித்த தாரகை கத்பர்ட்! கட்சி தாவுவோருக்கு தக்க பாடம் கற்று தந்த விளவங்கோடு
கன்னியாகுமரி: விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணியின் சாதனையை முறியடித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முக்கியமானது விளவங்கோடு.

இந்த தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. இவர் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அது மறுக்கப்பட்டதால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கு கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு ஏமாற்றம் விஞ்சியது.
இந்த நிலையில் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி விளவங்கோடு எம்எல்ஏ பதவியை விஜயதாரணி ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு மறுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, சமீபத்தில் மைலோடு கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி நாம் தமிழர் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர்.
கேரள எல்லைக்கு அருகே உள்ள இந்த தொகுதியில் மலையாளம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதுவரை நடந்த 15 சட்டசபை தேர்தல்களிலும் இந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி 10 முறை வென்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சி வென்றது.
கடந்த 2011, 2016, 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி தொடர்ந்து 3 முறை வென்றார். இவருக்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி ஆகியோரும் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போதைய இடைத்தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய 4 கட்சிகளும் பெண் வேட்பாளர்களையே களம் இறக்கின. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியான நிலையில் விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் நந்தின் 50,880 வாக்குகளை பெற்றுள்ளார்.
தாரகை வென்றதன் மூலம் விளவங்கோடு காங்கிரஸின் எஃகு கோட்டை என்பது நிரூபணமாகிவிட்டது. அதிலும் விஜயதாரணியை விட தாரகை கத்பர்ட் அதிக வாக்குகளை பெற்று, விஜயதாரணியின் சாதனையையே முறியடித்தார். அதாவது 2011 ஆம் நடந்த விளவங்கோடு சட்டசபை தேர்தலில் விஜயதாரணி 62,898 வாக்குகளை பெற்றிருந்தார்.
அது போல் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் விஜயதரணி 68,789 வாக்குகளை பெற்றார். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயதாரணி 87,473 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில் விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை 91,054 வாக்குகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு போன விஜயதாரணிக்கு எம்எல்ஏ பதவி பறிபோனதுதான் மிச்சம்! இது சிட்டிங் எம்எல்ஏ, எம்பிக்களுக்கு ஒரு பாடமாக இருக்குமா?
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications