முகமெல்லாம் புன்னகை.. கையில் 2 ஆயிரம்.. வேலம்மாள் பாட்டி ஞாபகம் இருக்கா.. நேரில் சந்தித்த முதல்வர் !
கன்னியாகுமரி : கொரோனா இரண்டாவது அலையின்போது தமிழக அரசு வழங்கிய 2000 ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு பையுடன் பொக்கை வாயை காட்டி சிரித்து சமூகவலைதளங்களில் வைரலான பாட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உள்ளார்.
கொரோனா இரண்டாம் கட்டத்தில் தமிழக அரசால் நிவாரணமாக ரூ. 2,000 மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயது பாட்டி வேலம்மாள், அரசு வழங்கிய நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருள்களை பெற்றுக்கொண்டார்.

வேலம்மாள் பாட்டி
கைகளில் பணம் மற்றும் மளிகைப் பொருட்களுடன் வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியில் பொக்கை வாய்காட்டி சிரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது. பலரும் அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அந்தப் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின், இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு' எனக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார். அதையும் பலர் பகிர்ந்ததோடு ஆயிரக்கணக்கில் கமெண்ட் செய்திருந்தனர்.

நாகர்கோவிலில் ஆய்வு
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவற்றை சரி செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி, அந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் வந்துள்ளார்.

நேரில் சந்திப்பு
இந்நிலையில் பொக்கை வாய் காட்டி சிரிந்து பேமஸ் ஆன வேலம்மாள் பாட்டி முதலமைச்சரை நேரில் சந்தித்து, தனக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெற்று தந்தமைக்காக நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications