Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவு போன்ற இடைத்தரகர் தமிழ்நாட்டிலேயே கிடையாது.. தகுதியே இல்லை.. அண்ணாமலை பரபர பேச்சு! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழ்நாட்டிலேயே கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக சபாநாயகர் அப்பாவு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றைக் கூறினார். "வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை குறிவைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசி குறிப்பிட்ட தொகையை வாங்குவது என இப்படித்தான் நடந்நு வருகிறது.

There is no other middlemen like appavu in tamilnadu: annamalai attacks

என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள். நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்றேன். மத்திய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள். செல்போன் என்னை மாற்ற சொன்னார்கள். இப்படி எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபாநாயகர் அப்பாவுவை விமர்சித்துள்ளார். அண்ணாமலை பேசுகையில், "தமிழக சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகராக உள்ளார் என்றால் அது அப்பாவு மட்டும்தான். அவர் எப்படி சபையை நடத்துகிறார் என்று நமக்கு தெரியும். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பேச முயன்றால், மைக்கை ஆஃப் செய்கிறார். இடைத்தரகர் என்ற வார்த்தையைச் சொல்ல தமிழ்நாட்டில் ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது சபாநாயகர் அப்பாவுதான்" என்றார்.

மேலும், 3 மாநில தேர்தல் வெற்றி பற்றி பேசிய அண்ணாமலை, "4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக வரலாறு படைத்திருக்கிறது. மூன்று மாநிலங்களில் மக்கள் மீதுள்ள அபிமானத்தில் வெற்றி பெற்றுள்ளோம். மத்தியப் பிரதேசத்தில் 163 எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு, 2003-ல் இருந்தே ஆட்சி செய்து வருகிறோம். இடையில் 15 மாதங்கள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சத்தீஸ்கரில் கடந்த முறை 15 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றார்கள். இன்று 56 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம்.

ராஜஸ்தானில் 115 எம்.எல் ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். தெலங்கானாவில் 8 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்தான். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதற்குப் பிறகு நடந்த தேர்தல் இது. தேர்தலின்போது, ஓபிசி சமூகத்துக்கு முன்னுரிமை இல்லை, இலவச திட்டங்கள் என்பது போன்ற பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி மோடி கேரன்ட்டி கொடுத்தார்.

இந்த மாநிலங்களில் முதல்வர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தாமல், கட்சியை முன்னிலைப்படுத்தி மோடி கேரன்ட்டி வாக்குறுதி அளித்ததன் மூலம், வெற்றி பெற்றுள்ளோம். தெலுங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளோம். எனவே, 2024-ல் 400 எம்.பி-க்களைத் தாண்டி வெற்றி பெறுவது உறுதி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்ககில் எஸ்.சி, எஸ்.டி மக்கள் எந்தபக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டி உள்ளது.

தெலங்கானாவில் பா.ஜ.க 8 இடங்களில் வென்றாலும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானித்தன. இது கட்சிக்கு இரண்டாம் கட்ட வளச்சியாகும். எனவே, 2028 தேர்தலில் தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். சனாதனம் குறித்த பிரசாரம் வட மாநிலத்தில் எடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை... சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் முக்கியம் என உதயநிதி கூறினார். மோடி கேரண்ட்டியும், சனாதன பிரசாரமும் வடமாநிலத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன.

தெலங்கானாவில் 2018-ல் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ இருந்தார், 2019-ல் 4 எம்.பி-க்கள் வென்றனர். இப்போது 8 எம்.எல்.ஏ-க்கள் வந்துள்ளனர். 2028 தேர்தலில் தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும். 2024 தேர்தலில் விந்திய மலைக்கு கீழ் உள்ள 169 சீட்களில் பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகிறது." எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+