கன்னியாகுமரியில் போலீஸை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ்.. நாகர்கோவில் வீட்டில் நம்ப முடியாத ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடசேகரி காவல் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர் சீருடை இல்லாமல் மப்டியில் ரோந்து சென்ற போது, போலீஸ் என்று தெரியாமல் அவரையே உல்லாசத்திற்கு அழைத்துள்ளார் புரோக்கர் ஒருவர்.. சப் இன்ஸ்பெக்டரும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், புரோக்கர் கூறிய வாடகை வீட்டிற்கு போயிருக்கிறார். அங்கு நர்ஸ் உள்பட 3 பேரை அவர் கையும் களவுமாக பிடித்தார்... நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டின் மிகவும் அழகான மாவட்டங்களில் ஒன்று.. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் உள்ளிட்ட நான்கு வகை நிலப்பரப்பு கொண்ட நிலமாக கன்னியாகுமரி இருக்கிறது. அதுமட்டுமின்றி, முக்கடல் சங்கமிக்கும் புகழ்பெற்ற கன்னியாகுமரி கடற்கரை இருக்கிறது. இதுதான் இந்தியாவின் ஆரம்பம்.. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம், பூங்கா என ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவின் எல்லையில் உள்ளதால் கேரளாவை போன்றே மிக அழகாக இருக்கும். இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களை குறிவைத்து விபச்சாரமும் ரகசியமாக நடக்கிறது. என்ன தான் நடவடிக்கைகள் எடுத்தாலும் மீண்டும் மீண்டும் சிலர் விபச்சாரத்தில் ஈடுபடுவது நடக்கத்தான் செய்கிறது.. நாகர்கோவில் பகுதியில் அப்படித்தான் போலீசிடமே போய் சிக்கியுள்ளது ஒரு கும்பல்.. அதுபற்றி பார்ப்போம்.
நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக லட்சுமணன் என்பவர் பணியாற்றி வருகிறார். எஸ்ஐ லட்சுமணன் நேற்று முன்தினம் நாகர்கோவில் கோர்ட் சாலையில் சீருடை அணியாமல் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களும், ஒரு வாலிபரும் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசினார்கள்.
அப்போது அவர்கள் தங்களிடம் இளம்பெண் ஒருவர் இருப்பதாகவும் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.1,500 தர வேண்டும் என்றும் கூறி அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்திருக்கிறாராம். இதை பார்த்து ஆடிப்போன சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன், உடனடியாக வடசோி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனிடையே வந்திருந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் என தெரிந்ததும், 2 பெண்களும், வாலிபரும் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை சுற்றி வளைத்த நிலையில், மற்ற போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பெண்கள் மற்றும் அந்த புரோக்கர் இளைஞரை மடக்கி பிடித்தனர். இதற்கிடையே அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் என்பதும், அவரிடம் பணத்தாசை காட்டி 2 பெண்களும், அந்த வாலிபரும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 27), அவரது மனைவி அனு என்ற ராகவி (25) மற்றும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சந்திரா என்ற விஜயகுமாரி (56) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமாரி புரோக்கராக செயல்பட்டதும், அனு நர்சாக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸ் என்று தெரியாமல் போய் அவரிடமே விபச்சார கும்பல் சிக்கிய சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications