கையில் சிகரெட் உடன் சிவபெருமான்! திருமண பேஸ்டரால் பெரிய சர்ச்சை! கன்னியாகுமரியில் ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டு இருந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை போலீசார் நீக்கி உள்ளனர்.

இயக்குநர் லீனா மணிமேகலை "காளி" என்ற ஆவணப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் புகை பிடிப்பது போலவும் கையில் தன்பால் ஈர்ப்பார்களின் சிலையை வைத்திருப்பது போலவும் படம் இடம் பெற்றி இருந்தது. இதற்குப் பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தது.

 காளி சர்ச்சை

காளி சர்ச்சை

இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் உள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். லீனா மணிமேகலையின் இந்த ஆவணப் பட போஸ்டர் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இந்து கடவுள்களை திட்டமிட்டு அவதூறு செய்வதாக லீனா மணிமேகலை மீது புகார் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் அதனை போலீசார் அகற்றி உள்ளனர். கன்னியாகுமரியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தங்கள் நண்பருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில் சிவபெருமான் புகைபிடிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளதே சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

 கையில் சிகரெட்

கையில் சிகரெட்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் வசிக்கும் பிரதீஷ் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவரை வாழ்த்தி நண்பர்கள் சிலர் போஸ்டர் மற்றும் பேனர்களை வைத்து இருந்தனர். அதில் சிவன் மற்றும் பார்வதி படங்களுக்கு நடுவே இந்த தம்பதியின் படம் இடம் பெற்று இருந்தது. இதில் சிவன் சிகரெட் பிடிப்பது போன்ற படம் இடம் பெற்று இருந்ததால் சர்ச்சை கிளப்பியது.

 போலீஸ் ஸ்டேஷன்

போலீஸ் ஸ்டேஷன்

இதையடுத்து அந்த போஸ்டர்களை கன்னியாகுமரி போலீசர் உடனடியாக நீக்கினர். மேலும், இது குறித்து புதுமணத் தம்பதி மட்டும் அவரது நண்பர்களை போலீசார் நேரில் அழைத்து விசாரணை செய்தனர். தெரியாமல் வைத்துவிட்டதாக நண்பர்கள் கூறியதைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் எச்சரித்து அனுப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+