இதுதான் பெண்கள் பாதுகாப்பா? அவன் என்னை வாழ விட மாட்டான்.. விபரீத முடிவெடுத்த அனிஷா! தவெக புள்ளி கைது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். கணவர் வெளிநாட்டில் வசித்த நிலையில், தவெக பிரமுகர் சங்கர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த இளம்பெண் கணவருக்கு "அவன் என்னை வாழ விட மாட்டான். குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் போகிறேன்" என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் - அனிஷா தம்பதியினர். மகேஷ் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி அனிஷா குலசேகரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

Kanyakumari Woman Suicide Abetment Case

இந்த நிலையில், அனிஷா வேலைக்குச் சென்று வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் சங்கர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனிஷா தனது கணவர் மகேஷிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அப்போது, வெளிநாட்டில் இருந்த மகேஷ், "நான் ஊருக்கு வந்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம். கவலைப்பட வேண்டாம்" என்று தனது மனைவிக்கு ஆறுதல் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சங்கர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் நிலையில், மனவேதனை அடைந்த அனிஷா, தனது கணவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "அவன் என்னை வாழ விட மாட்டான். குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் போகிறேன்" என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அனிஷா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்றும் பல நாட்கள் கடந்தும், தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மகேஷ் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, வழக்கை தீவிரமாக விசாரித்த குலசேகரம் போலீசார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் தவெக பிரமுகர் சங்கரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனிஷாவின் மரணத்திற்கு முன்பு அனுப்பிய குறுஞ்செய்தி, குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+