நாகர்கோவில் வடசேரி லேடிஸ் ஹாஸ்டலுக்கு போன கன்னியாகுமரி இளைஞருக்கு.. வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்திற்குள் நர்சிங் பயிற்சி பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் போதையில் வாலிபர் ஒருவர் திடீரென செல்ல முயன்றுள்ளார். அவரை அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சத்தம் கேட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் வெளியே வந்து கூச்சலிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டு அந்த இளைஞரை மடக்கி பிடித்து தாக்கினர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து இளைஞரை மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவிலில் இப்படி என்றால், திருச்சி என்.ஐ.டி.யில் மாணவியிடம் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரச்சனை ஏற்பட்டது. இதனை கண்டித்து விடிய, விடிய மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி துவாக்குடி பகுதியில் என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்பக்கழகம்) செயல்பட்டு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியும், வெளியில் அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள். என்.ஐ.டி. வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு மகளிர் விடுதியில் இணையதள வசதியை ஏற்படுத்த கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த காந்தி மகன் கதிரேசன் (வயது 38) என்பவர் வந்துள்ளார்- அப்போது விடுதி அறையில் மாணவி ஒருவர் தனியாக அமர்ந்து படித்து கொண்டு இருந்தார்.
இதை கண்ட கதிரேசன், மாணவியிடம் ஆபாச சைகை காண்பித்து அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டனர். உடனடியாக இதுகுறித்து சக மாணவ-மாணவிகளிடம் கூறினார். இந்த விவாகரத்தில் புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மாணவியிடம் ஒப்பந்த ஊழியர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பற்றிய தகவல் மற்ற மாணவ-மாணவிகளுக்கு வேகமாக பரவியதால் ஏராளமான மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். விடிய விடிய போராட்டம் நடந்த நிலையில், விடுதி வார்டன்கள் காலையில் மன்னிப்பு கோரினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் நேற்று காலை 10 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications