Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலம்மாள் பாட்டி நினைவிருக்கா? வீடு வழங்க முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.2000 நிவாரணத் தொகையுடன் போஸ் கொடுத்து பிரபலமான வேலம்மாள் பாட்டி, தற்போது வீடு இல்லாமல் தெருவில் நிற்பதாகவும், முதலமைச்சர் வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

Recommended Video

    ஊருக்கே குழந்தை மாதிரி.. ஒரு நாளில் வைரலான Velammal பாட்டி | Jackson Herby | Oneindia Tamil

    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 2 தவணைகளாக ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.

    ரேஷன் அட்டைக்கு தலா ரூ.2,000 நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர். இந்த தொகுப்பை பெற்றுக்கொண்ட வேலம்மாள் என்ற பாட்டி சிரித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

    ஜாக்சன் ஹெர்பி படம்

    ஜாக்சன் ஹெர்பி படம்

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து இருக்கும் கீழகலுங்கடிப்பகுதியை சேர்ந்தவர் 91 வயதான வேலம்மாள் பாட்டி. பணம் மற்றும் பரிசுத் தொகுப்புடன் முகம் மலர சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை கன்னியாகுமரியை சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி புகைப்பட பத்திரிகையாளர் எடுத்திருந்தார்.

    முதலமைச்சர் பகிர்ந்த படம்

    முதலமைச்சர் பகிர்ந்த படம்

    இந்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இதன் மூலமாக ஒரே நாளில் பிரபலமானார் வேலம்மாள் பாட்டி. இந்த புகைப்படத்தை எடுத்த ஜேக்சன் ஹெர்பியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றார்.

    ஸ்டாலினுடன் சந்திப்பு

    ஸ்டாலினுடன் சந்திப்பு

    அங்கு வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலன் குறித்து விசாரித்தார். அப்போது வேலம்மாள் பாட்டி முதியோர் உதவித் தொகை கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது அதை வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அத்துடன் தனக்கு வீடு வழங்க வேண்டும் என்று வேலம்மாள் பாட்டி வைத்த கோரிக்கையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

    தெருவில் நிற்கிறேன்

    தெருவில் நிற்கிறேன்

    இந்த நிலையில், வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், பேசும் வேலம்மாள் பாட்டி, "முதலமைச்சர் ஐயா! நீங்க வீடு தாங்க என்று சொன்னேன். கலெக்டரை பார்க்க சென்றேன். அவரும் தருவதாக சொன்னார். இதுவரை தரவில்லை. தெருவில் நிக்கிறேன் ஐயா!" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

    ஜாக்சன் ஹெர்பி விளக்கம்

    ஜாக்சன் ஹெர்பி விளக்கம்

    இது தொடர்பாக ஜாக்சன் ஹெர்பியிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக விளக்கம் கேட்டோம். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் கன்னியாகுமரிக்கு வருகை தந்தபோது வீடு வழங்குமாறு கேட்ட வேலம்மாள் பாட்டியிடம் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தும் இன்னும் வீடு கிடைக்கவில்லை. தற்போது பாட்டி வசித்து வரும் வாடகை வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி இடிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்கள். இதனால் பாட்டி தங்குவதற்கே இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவேதான், பாட்டியின் கோரிக்கையுடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம்" என்றார். அதேநேரம், முதல்வர் இதுவரை எழுத்துப்பூர்வமாக அப்படியொரு வாக்குறுதியை வேலம்மாளுக்கு வழங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இப்படியொரு வாக்குறுதியை அவர் வாய்மொழியாக வழங்கியதாக அப்போது தகவல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன, அவ்வளவுதான் என்று திமுக தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+