கன்னியாகுமரியில் எடப்பாடியே எதிர்பார்க்காதது... விஜய்யின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் அதிரடி
கன்னியாகுமரி: விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி. டி. செல்லகுமார், தனது இயக்கத்தை கலைத்துவிட்டும், விஜய்யிடமிருந்து பிரிந்தும் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு வர்த்தகப் பிரிவில் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் எம்எல்ஏ சீட் அவருக்கு கொடுக்கப்படாததால், திமுகவிலிருந்து விலகினார். மீண்டும் கலப்பை இயக்கத்தை துவங்கினார். இந்த நிலையில், நாகர்கோவிலில் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிடி செல்வக்குமார். விஜய் நடித்த 'புலி' படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இவர், 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார். மேலும், விஜய்யின் 'சுறா', 'வில்லு' 'போக்கிரி' ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார்.

இவர் விஜய்யையை விட்டு விலகிய நிலையில், கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார். இதையடுத்து திமுக மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தனக்கு ஒரு சீட் வழங்கப்படும் என பிடி செல்வகுமார் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதனால், பிடி செல்வகுமார் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பி.டி செல்வக்குமார் திமுகவில் இருந்து விலகினார். திமுகவில் இருந்து விலகிய நிலையில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவு அளிப்பதாக பி.டி.செல்வகுமார் கடந்த ஒரு வாரம் முன்பு கூறியிருந்தார். இதையடுத்து தளவாய் சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிகிறார்.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை பி.டி.செல்வகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் அவர்களின் வெற்றிக்காக கடினமாக போராடுவேன் எனவும், மாவட்டத்தில் ஏனைய தொகுதிகளில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக்கு கலப்பை மக்கள் இயக்கம் தீவிரமாக பணியாற்றும் எனவும் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications