கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை இன்று மதியம் 2 மணி முதல் வாகனத்தில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக வெற்றிகழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய், ஞாயிற்றுக்கிழமை (12.04.2026, ) கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை விஜய் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! " இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
லீக்கான ‘ஜனநாயகன்'.. வலைதளங்களில் பரவும் 5 நிமிட காட்சிகள்.. விஜய் – படக்குழுவுக்கு அதிர்ச்சி -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
TN 2026 First Review : நட்டி நட்ராஜின், அரசியல் கலந்த தநா 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ -
Vijay Cycle: காரைக்குடியில் சைக்கிளில் பயணித்த விஜய்! கூட்டத்தில் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு -
கொடுமை.. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பிடித்து தொங்கிய தொண்டர்கள்.. காலால் மிதித்த பவுன்சர்! -
TN 2026 Review: இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா? தநா 2026ல் கதை இதுதான்! இந்திரஜா நெகிழ்ச்சி -
பவுன்சர்களால் பஞ்சராகும் விஜய் இமேஜ்.. திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் ஒரு பஞ்சாயத்து -
சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சாரத்தை வழிமறித்த பறக்கும் படையினர்! பரபரப்பு! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத்














Click it and Unblock the Notifications